English
பெங்களூரு: பெங்களூருவை அடுத்துள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகள் டிவி பார்த்துக்கொண்டே செல்போனில் பேசுவது போன்ற வீடியோ அண்மையில் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கைதிகள் மது அருந்திவிட்டு நடனம் ஆடும் வீடியோ கன்னட சேனல்களில் வெளியானது. அந்த வீடியோவில் 10-க்கும் மேற்பட்ட கைதிகள், மது அருந்திக்கொண்டு அசைவ உணவு, பழங்கள் சாப்பிடுவது போலவும் பிறகு பாட்டு பாடி நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் ஆளும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தனர்.
Tamil
பெங்களூரு சிறையில் கைதிகள் மது விருந்துடன் ஆட்டம்: 2 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்
பெங்களூரு: பெங்களூருவை அடுத்துள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகள் டிவி பார்த்துக்கொண்டே செல்போனில் பேசுவது போன்ற வீடியோ அண்மையில் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கைதிகள் மது அருந்திவிட்டு நடனம் ஆடும் வீடியோ கன்னட சேனல்களில் வெளியானது.
அந்த வீடியோவில் 10-க்கும் மேற்பட்ட கைதிகள், மது அருந்திக்கொண்டு அசைவ உணவு, பழங்கள் சாப்பிடுவது போலவும் பிறகு பாட்டு பாடி நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் ஆளும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தனர்.
Click the link above to read the full article on the original website.