English
தென்காசி: இலஞ்சியில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் செல்போனை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர், அவருக்கு உதவிய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று முன்தினம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தென்காசி அருகே இலஞ்சி தேர்வு மையத்தில் தேர்வர் ஒருவர் செல்போனை பயன்படுத்தியதை, தேர்வு அறை கண்காணிப்பாளர் கண்டறிந்தார். உடனடியாக அவரை பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். குற்றாலம் போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர்,
சிவகிரியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் (23) என்பது தெரியவந்தது.
Tamil
தென்காசி மாவட்டம் இலஞ்சி மையத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வில் முறைகேடு: தேர்வர், ஒரு பெண் உட்பட 4 பேர் கைது
தென்காசி: இலஞ்சியில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் செல்போனை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர், அவருக்கு உதவிய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று முன்தினம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
தென்காசி அருகே இலஞ்சி தேர்வு மையத்தில் தேர்வர் ஒருவர் செல்போனை பயன்படுத்தியதை, தேர்வு அறை கண்காணிப்பாளர் கண்டறிந்தார். உடனடியாக அவரை பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். குற்றாலம் போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர், சிவகிரியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் (23) என்பது தெரியவந்தது.
Click the link above to read the full article on the original website.