English
புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வெடிப்புச் சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. “இந்த துயரமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் ஆதரவாக இருக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டுகிறோம். இந்தச் சம்பவம் குறித்து அரசு ஆழமாகவும், விரைந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவு தலைவர் பவன் கெரா தெரிவித்துள்ளார்.
Tamil
டெல்லி வெடிப்புச் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது: காங்கிரஸ்
புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வெடிப்புச் சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
“இந்த துயரமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் ஆதரவாக இருக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டுகிறோம். இந்தச் சம்பவம் குறித்து அரசு ஆழமாகவும், விரைந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவு தலைவர் பவன் கெரா தெரிவித்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.