English
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலி இடங்கள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டில் சேர அவசர சிகிச்சை, மயக்க மருந்து, அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், எலும்பியல், சுவாச சிகிச்சை, இதயவியல், இசிஜி, மனநலம், மருத்துவப் பதிவேடு ஆகிய பிரிவுகளில் டெக்னீஷியன்கள் உள்ளிட்ட ஓராண்டு மருத்துவச் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tamil
சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலியிடங்கள்: நவ.14-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலி இடங்கள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டில் சேர அவசர சிகிச்சை, மயக்க மருந்து, அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், எலும்பியல், சுவாச சிகிச்சை, இதயவியல், இசிஜி, மனநலம், மருத்துவப் பதிவேடு ஆகிய பிரிவுகளில் டெக்னீஷியன்கள் உள்ளிட்ட ஓராண்டு மருத்துவச் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Click the link above to read the full article on the original website.