த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் வாக்குவாதம் செய்த காட்சி.

Vellore: Complaint of extortion in brick kilns; protest against the union secretary of the labor union

English

The people from Pudur village near Kaniyampadi in Vellore are Shanmugam, Dhinakaran, Sunilkumar, Ramesh, and Suman. They are engaged in the brick kiln business in the same area. In this context, there have been complaints that the administrators of the Tamil Nadu Vetri Kazhagam, led by Kaniyampadi East Union Secretary Vijayakumar, including Lokesh and Easwaran, threatened the aforementioned brick kiln owners and demanded a monthly bribe of Rs. 1 lakh. Regarding this, on the 22nd, the union secretary of Th.Ve.K and other administrators who went to the brick kiln area were confronted and engaged in a heated argument by the brick kiln owners and their supporters. At that time, a scuffle broke out between the two sides.

A scene where T.V.K. Union Secretary Vijayakumar argued. On the same day, brick kiln owners filed a complaint against T.V.K. officials at the Vellore Taluk Police Station. In that complaint, they stated, "Now T.V.K. is in power. Because of this, all of you who own kilns must pay us a commission. Otherwise, you will not be allowed to operate the kiln." They demanded that T.V.K. leaders be called, investigated, and action taken. Coimbatore girl murder: "I have ordered the FIR to be filed immediately," said the Chief Minister Vijay. On the T.V.K. side, "Mineral theft is happening in those areas. Soil is being brought to the kiln in lorries without permits."

When illegal soil was being taken, we recorded a video and lodged a complaint with the revenue department officer. When the officer arrived, he asked us to show the affected quarries, so the T.V.K administrators also went along with them. The officers stopped and warned two trucks that were carrying soil without permission. Following this, after the officers left, the T.V.K administrators are being blamed for demanding bribes. It is explained that the brick kiln owners, whose quarries were stopped from illegal mining due to the protest, along with the T.V.K union secretary, have filed a complaint at the Vellore SP office alleging threats and attacks. In this situation,

It appears that the Velur Taluka police conducted an investigation by summoning the owners of the brick kiln. As a result, the agitated parties gathered a large number of people today and engaged in a road blockade. "Our livelihood is being affected. The T.V.K. officials came demanding bribes," they repeatedly protested, causing a major uproar over the issue. Officials intervened with compromise talks and managed to end the protest. Coimbatore girl murder: "Even though the government changed, the situation remains the same" – S.P. Velumani criticizes the T.V.K. government.


Tanglish

Velur adutha Kaniyampadi Pudur graamaththaich serndhavargal Sanmugam, Thinakaran, Sunilkumar, Ramesh, Suman. Ivargal adhe pagudiyil Sengal soolai thozhil seygindranar. Indha nilaiyil, Tamilaga vetri kazhagaththin Kaniyampadi kizakku ondriya seyalaalar Vijayakumar thalaimayilana nirvaagigal Lokesh, Eeswaran ullithor merkantha Sengal soolai urimaiyalarhalai miratti maathanthorum Rs.1 laksham maamool kaettadhaga pukaar ezhundhirukkiradhu. Ithu thodarbaaga, kadantha 22-am thethi Sengal soolai pagudhikku sendrindra Th.Ve.K ondriya seyalaalar ullith nirvaagigalai, Sengal soolai urimaiyalarhalum, avargalin aadharvaalarhalum madakki kadum vaakkuvaadaththil eedupattanar. Appodhu, irutharappinridaye kaikalaappum erpaduthadhu.

Tha.Ve.K onriyaach cheyalalar Vijayakumar vaakkuvaadham seitha kaatchi. Andraiya dhiname, Tha.Ve.K nirvaagigal meedhu sengal soolai urimaiyaalargal Velur thaaluka kaaval nilaiyathil pugaara liththanar. Andha pugaariil, "Ippodhu T.V.K aatchi nadakkiradhu. Idhanaal, soolai vaiththirukkum neenga ellorum engalukku maamool thara vendum. Illaiyenil, neenga soolai thozhil seiyya mudiyadhu" ena mirattugindranar. T.V.K piramugargalai azhaiththu visaariththu nadavadikkai edukka vendum" enru theriviththirundhanar. Kovai sirumi kolai: "Kutrapaththirikaiyai udanadiyaaga thaakkal seiyya uththaravittullaen" - Mudhalvar Vijay. Tha.Ve.K tharappilum, "Andha pagudigalil kanimavalak kollai nadakkiradhu. Permit illaamaley laarigalil soolaikku mann kondruvarugindranar.

Thiruttu man edukkumpodhu video eduthum, kanivalaththurai adhikaariyidam pukaar theriviththom. Adhikaarhi vandhapodhu, pukaarukkullaana soolaigalai kaattach sonnaadhaal avargaludan tha.ve.ka nirvaagigalum udan senrargal. Anumathi illaamal man aerri vandha 2 laarigalai adhikaarigal madakki echchariththargal. Idaiyaduthu, adhikaarigal senra piragu vendumendrae maamul kaettuvandhadhaaga tha.ve.ka nirvaagigal meedhu pazhisumaththugirargal’’ endru vilakkamalikkindranaar. Mariyal porattam kanimath thiruttai thaduththadhaal mirattal viduthu thaakkuthal nadaththiyadhaaga sengal soolai urimaiyaalargal meedhum tha.ve.ka ondriya seyalalar tharappinar velur S.P aluvagaththil pukaaraliththirukkindranaar. Indha nilaiyil,

Sengal soolai urimaiyaalargalai azhaiththu Velur thaaluka policear visaaranai nadaththiyathaga therigiradhu. Idhanaal, aaththiramadaindha andha tharappinar indraiya dhinam eraalamaanoarai thiratti saalai mariyalil eedupattanar. "Engalin vaazhvadharam paathikkappadugiradhu. Tha.Ve.Ka nirvaagigal maamool kaettudhaan vandhaargal" enath thirumbath thirumba muraiyiduvathaal, indha vivakaaram perum paraparappaik kilappiyirukkiradhu. Adhigaarigal samaras paechuvaarththaiyil eedupattu poraattaththaik kalaikkach seidhanar. Kovai sirumi kolai: "Aatchi maarinaalum, kaatchi maaravillai" – Thavega arasu meedhu S.P. Velumani vimarsanam


Tamil

வேலூர் அடுத்த கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன். இவர்கள் அதே பகுதியில் செங்கல் சூளை தொழில் செய்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் மேற்கண்ட செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக, கடந்த 22-ம் தேதி செங்கல் சூளை பகுதிக்குச் சென்றிருந்த த.வெ.க ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை, செங்கல் சூளை உரிமையாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் மடக்கி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினரிடையே கைகலப்பும் ஏற்பட்டது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் வாக்குவாதம் செய்த காட்சி.
த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் வாக்குவாதம் செய்த காட்சி.

அன்றைய தினமே, த.வெ.க நிர்வாகிகள் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அந்தப் புகாரில், “`இப்போது டி.வி.கே ஆட்சி நடக்கிறது. இதனால், சூளை வைத்திருக்கும் நீங்கள் எல்லோரும் எங்களுக்கு மாமூல் தர வேண்டும். இல்லையெனில், நீங்கள் சூளை தொழில் செய்ய முடியாது’ என மிரட்டுகின்றனர். டி.வி.கே பிரமுகர்களை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தனர்.

த.வெ.க தரப்பிலும், “அந்தப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளை நடக்கிறது. பர்மிட் இல்லாமலே லாரிகளில் சூளைக்கு மண் கொண்டுவருகின்றனர். திருட்டு மண் எடுக்கும்போது வீடியோ எடுத்தும், கனிவளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தோம். அதிகாரி வந்தபோது, புகாருக்குள்ளான சூளைகளைக் காட்டச் சொன்னதால் அவர்களுடன் த.வெ.க நிர்வாகிகளும் உடன் சென்றார்கள்.

அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் மடக்கி எச்சரித்தார்கள். இதையடுத்து, அதிகாரிகள் சென்ற பிறகு வேண்டுமென்றே மாமூல் கேட்டுவந்ததாக த.வெ.க நிர்வாகிகள் மீது பழிசுமத்துகிறார்கள்’’ என்று விளக்கமளிக்கின்றனர்.

மறியல் போராட்டம்
மறியல் போராட்டம்

கனிமத் திருட்டைத் தடுத்ததால் மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மீதும் த.வெ.க ஒன்றியச் செயலாளர் தரப்பினர் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்து வேலூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்தத் தரப்பினர் இன்றைய தினம் ஏராளமானோரைத் திரட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

“எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. த.வெ.க நிர்வாகிகள் மாமூல் கேட்டுதான் வந்தார்கள்’’ எனத் திரும்பத் திரும்ப முறையிடுவதால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தைக் கலைக்கச் செய்தனர்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Megadathu: ‘No magnetism’ – Supreme Court dismisses Tamil Nadu government’s review petition!

‘AIADMK MLAs Resign!’ – Who are they? Meeting with Minister Athav Arjuna – What is the detail?