தலைமைச் செயலகத்தில்… முதல்வர் நாற்காலியில் விஜய்! | Live Updates

மதச்சார்பின்மை ஓங்கட்டும் – சு.வெ வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து…

“தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர், மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

மக்கள் வழங்கிய வெற்றிக்கு அடிப்படையான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உங்கள் அரசு முழு வெற்றியடையட்டும்.

தமிழ்நாட்டின் ஜனநாயக மரபும், சமூக நீதி மரபும், ஒற்றுமைப்பாடும், மதச்சார்பின்மையும் என்றும் ஓங்கட்டும்!

அன்பின் வாழ்த்துகள்!”

நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை.

தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா முன்னிலையில் புதிதாக தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்.

மே.12ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்.

தற்காலிக சபாநாயகர் சோழவந்தான் – தனி தொகுதி எம்.எல்.ஏ கருப்பையா!

தலைமைச் செயலகம் வந்தார் விஜய்!

முதல்வராகப் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேரு ஸ்டேடியத்திலேயே சில திட்டங்களை அறிவித்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதனை தொடர்ந்து முதல்வராக தனது முதல் உரையை வழங்கினார் விஜய்.

அதனை தொடர்ந்து தற்போது முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்திருக்கிறார்.

`Lets Take a Selfie’ – செல்ஃபி எடுத்த முதல்வர் விஜய்; ஆர்ப்பரித்த அரங்கம்!

முதல்வர் விஜய், பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு, அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கினார். பின்னர் உரையாற்றியவர், உற்சாகத்துடன் செல்ஃபி எடுக்க… அரங்கம் ஆர்ப்பரித்தது.

`என் அரசில் ஒரே அதிகாரம்தான்; ஆட்டம் போட நினைத்தால்…’ – முதல்வர் விஜய்

“நான்தான் என் அரசில் ஒரே அதிகாரம். பல அதிகார மையங்கள் எல்லாம் இல்லை. ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என நினைக்க வேண்டாம். ஆட்சிக்கு வந்துவிட்டோம், ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இப்போதே அழித்து விடுங்கள்.”

`மோசமான நிலையில் தமிழ்நாடு நிதிநிலை; வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்!’ – விஜய்

விஜய்

“இன்று தமிழ்நாடு அரசின் நிலைமை குறித்து உங்களிடம் தெரிவிக்க வேண்டும். முன்பிருந்த அரசு கஜானாவை காலி செய்து விட்டது. தமிழ்நாடு அரசின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். வெளிப்படையாக செயல்படுவேன். இது உங்கள் ஆட்சி…. சொன்னதைச் செய்வேன். அதற்கு நீங்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் அளிக்க வேண்டும்!”

`மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவன் அல்ல…’ – முதல்வர் விஜய் உரை

“ஒரு உதவி இயக்குநரின் மகனாக என் வாழ்க்கையை தொடங்கி, இங்கு இன்று நிற்கிறேன். வறுமையை அறிந்தவன். நான் ஒன்றும் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. உங்களில் ஒருவன் நான்.”

`200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்’ – முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்!

முதல் கோப்பாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் திட்டத்தில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய். அதைத் தொடர்ந்து சிங்கப்பெண் மற்றும் போதை தடுப்பு சிறப்பு குழு தொடர்பான இரு திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

முதல்வராக முதல் கையெழுத்து; உரையாற்றுகிறார் விஜய்!

முதல்வராகப் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேரு ஸ்டேடியத்திலேயே சில திட்டங்களை அறிவித்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகிறார். அதைத் தொடர்ந்து உரையாற்றவும் இருக்கிறார். முதல்வரின் முதல் கையெழுத்து எந்த திட்டம் தொடர்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராகுலுடன் சத்தியமூர்த்தி பவன் செல்லும் முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு செல்ல உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

விஜய் பதவியேற்பு விழா: தவெக-வின் முதல் பெண் அமைச்சர் – பதவியேற்றார் கீர்த்தனா!

அமைச்சரானார் காரைக்குடி எம்.எல்.ஏ டி.கே.பிரபு!

ராஜ்மோகன் அமைச்சராகப் பதவியேற்பு!

அமைச்சராகப் பதவியேற்றார் நிர்மல்குமார்!

வெங்கட்ரமணன் பதவியேற்றார்! 

`செங்கோட்டையன் எனும் நான்’ – அமைச்சரானார் தவெக-வின் மூத்த நிர்வாகி!

அருண் ராஜ் பதவியேற்பு!

அருண் ராஜ்

அமைச்சராகப் பதவியேற்றார் ஆதவ் அர்ஜுனா!

ஆதவ் அர்ஜுனா

ஆனந்தைத் தொடர்ந்து வில்லிவாக்கம் எம்.எல்.ஏ ஆதவ் அர்ஜுனா, அமைச்சராகப் பதவியேற்றார்.

முதலமைச்சரைத் தொடர்ந்து `முதல்’ அமைச்சராய் பதவியேற்ற ஆனந்த்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தி.நகர் எம்.எல்.ஏ-வுமான ஆனந்த், முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து அமைச்சராகப் பதவியேற்றார்.

முதல்வரான மகன்; நெஞ்சம் நிறைந்து கண்கலங்கிய பெற்றோர்!

மகன் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதைக் கண்டு பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் நெகிழ்ந்து கண்கலங்கினர்.

`சி.ஜோசப் விஜய் எனும் நான்’ – பதவியேற்றார் முதல்வர்

`சி.ஜோசப் விஜய் எனும் நான்… தமிழ்நாட்டின் முதலமைச்சராக’ – பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

விஜய் பதவியேற்பு விழா: வந்தே மாதரத்துடன் தொடங்கியது அமைச்சரவை பதவியேற்பு!

வந்தே மாதரத்துடன் தொடங்கியது விஜய்யின் அமைச்சரவை பதவியேற்பு விழா.

அமைச்சர்களை அறிமுகம் செய்துவைத்த விஜய்!

விழா மேடையில் முதற்கட்டமாக அமைச்சர்களாகப் பதவியேற்கும் ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட 9 பேரையும் ஆளுநருக்கு அறிமுகம் செய்துவைத்தார் முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்து…

“தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திருமிகு. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் அமைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

விழா மேடையில் விஜய்யுடன் ராகுல் காந்தி!

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை பதவியேற்பு விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நிமிடங்களில் பதவியேற்பு தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் விஜய்யுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விழா மேடையில் இருக்கிறார்.

ஆளுநர் அர்லேக்கர் வருகை!

தவெக அமைச்சரவை பதவியேற்பு விழாவின் மிக முக்கிய நபராகப் பார்க்கப்படும் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர், விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்திருக்கிறார். இன்னும் சில நிமிடங்களில் ஆளுநர் விழா மேடைக்கு வந்து விஜய் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவியேற்பு செய்து வைக்கவிருக்கிறார்.

ஹிஸ்டரி ரிப்பீட்ஸ் – 1977 சம்பவத்தை 2026-ல் செய்துகாட்டிய விஜய்!

எம்.ஜி.ஆர் 1977-ல் ஆட்சியைப் பிடித்து படைத்த சாதனையை, 2026-ல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். எம்.ஜி.ஆருக்கு கிடைத்த அரசியல் வரவேற்பு கிடைக்காது எனப் பெரும்பாலானோர் கூறிவந்த நிலையில், வரலாற்றுச் சாதனை படைத்து தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்.

நயினார் டு டி.ஆர்.பாலு; முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சியினர்!

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு விழா வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தந்திருக்கின்றனர். நயினார் நாகேந்திரன், டி.ஆர்.பாலு, வன்னி அரசு, தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

கோட் சூட்டில் முதல்வர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விழா அரங்கத்தில் குழுமியிருக்கின்றனர். தனது பதவியேற்பு விழாவில் விஜய்யின் கோட் சூட் டிரெஸ்ஸிங் தனித்த கவனத்தை ஈர்த்திருக்கிறது. பெரும்பாலும் ஒயிட் அண்ட் லைட் காக்கியில் விஜய் தோன்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா அரங்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

சென்னை உள் விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு சற்று நேரத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், விழா அரங்கத்தில் உதயசந்திரன் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் விஜய்யைச் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேடையில் யார் யாருக்கு இருக்கை?

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு தலைமை செயலாளர், முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் தவெக தலைவர் விஜய், அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கும் தவெக எம்.எல்.ஏக்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், வெங்கட்ராமணன், பிரபு, ராஜ் மோகன், கீர்த்தனா ஆகியோருக்கு மேடையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விஜய் பதவியேற்பு விழா; வந்தடைந்தார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு வந்தடைந்தார். தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருக்கும் நிலையில், அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு விஜய்யை வாழ்த்துவதற்கு வந்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

பதவியேற்பு விழாவில் த்ரிஷா

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கு நிகழ்வில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டிருக்கிறார்.

`அன்பு தம்பி விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்!’ – பிரேமலதா 

தவெக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து!

“தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!

திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்”. – சீமான்

வெளியானது அமைச்சரவை பட்டியல்..!

பெரியார் திடலுக்கு செல்லும் விஜய்

இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் பெரியார் திடலுக்கு செல்கிறார்.

விஜய்
விஜய்

ராகுல் காந்தி வருகை

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்துவிட்டார்.

மகிழ்ச்சியில் ஷோபா

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அவரது அம்மா ஷோபா…

“எனக்கு மிக மகிழ்ச்சி. இன்று அன்னையர் தினம். இனிய அன்னையர் தினம் வாழ்த்துகள்” என்று பேசியுள்ளார்.

விஜய், ஷோபா சந்திரசேகர்
விஜய், ஷோபா சந்திரசேகர்

விஜய்க்கு திருமா வாழ்த்து

இன்று தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்கும் தவெக தலைவர் விஜயிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் திரு.விஜய் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்”.

தமிழ்நாடு முதல்வராகிறார் விஜய்

கடந்த மே 4-ம் தேதியே தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. பெரும்பாலான இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது தவெக.

ஆக, இந்தக் கட்சிகள் எல்லாம் ஆதரவு தர, நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.

பெரும்பான்மையை நிரூபித்ததும் நேற்று அர்லேகர் ஆட்சியமைக்க விஜயை அழைத்தார்.

இதையடுத்து இன்று தமிழ்நாடு முதல்வராகிறார் ஜோசப் C விஜய்.

இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக பதவியேற்கிறார் விஜய்.

இந்த நிகழ்வில் பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி.

விஜய்
விஜய்

மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Tamil Mother’s Day Greetings: Support parties question on Vijay’s first day in office

Tamil Mother’s Day Greetings: Support parties question on Vijay’s first day in office