TN Election Results: அமைச்சர் ஆர்.காந்தியை பின்னுக்கு தள்ளிய தவெக!… அதிர்ச்சியில் திமுக, அதிமுக! | Live

தமிழக மக்கள் தீர்ப்பு..!

ராணிப்பேட்டை தொகுதி:

முதல் சுற்றில் தி.மு.க வேட்பாளரான அமைச்சர் ஆர்.காந்திக்குப் பின்னடைவு…

த.வெ.க முன்னிலை!

தமிழக வெற்றி கழகம் முன்னிலை!

பல இடங்களில் திமுகவிற்கு மிக நெருக்கமாக வந்துவிட்டது தமிழக வெற்றி கழகம்

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கைகளில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஆன இடைவெளி குறைந்துள்ளது!

திமுகவின் கோட்டையான சென்னையில் டி நகர் அண்ணா நகர் சேப்பாக்கம் பெரம்பூர் என பல தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலை

மதுரை மத்தியில் இயக்குநர் சுந்தர்.சி முன்னிலை

சுந்தர்.சி
சுந்தர்.சி

மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி முன்னிலை வகித்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பழனிவேல் தியாகராஜனை பின்னுக்கு தள்ளி இயக்குநர் சுந்தர்.சி முன்னிலை வகித்து வருகிறார்.

முன்னணி நிலவரம்!

முதல் ஒரு மணி நேர வாக்கு எண்ணிக்கையின் படி திமுக முதல் இடத்திலும்

தமிழக வெற்றி கழகம் இரண்டாவது இடத்திலும்

அதிமுக மூன்றாவது இடத்திலும் உள்ளது

ஆனந்த் முன்னிலை!

சசிகலாவின் அ இ பு ம க முன்னிலை.

முதுகுளத்தூரில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராம்குமார் பாண்டியன் தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை., அமைச்சர் ராஜகண்ணப்பன் பின்னடைவு!

தி.நகரில் 738 வாக்குகள் வித்தியாசத்தில் ஆனந்த் முன்னிலை!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை பின்னடைவு.

முன்னணி நிலவரம்!

செந்தில் பாலாஜி 802 வாக்குகள் பெற்று முன்னிலை

தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி 1151 வாக்குகள் பெற்று முன்னிலை

காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு. அதிமுக வேட்பாளர் ராமு 328 வாக்குகள் பெற்று முன்னிலை

முந்தும் தவெக வேட்பாளர்கள்.!

பெரம்பூர் – விஜய்

திருச்சி கிழக்கு – விஜய்

கோபிச்செட்டிப்பாளையம் – செங்கோட்டையன்

திருச்செங்கோடு – அருண்ராஜ்

தி.நகர் – ஆனந்த்

தி.நகர்: தவெக ஆனந்த் 50 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜா அன்பழகனை விட முன்னிலையில் இருக்கிறார்!

ஆனந்த் | விஜய்
ஆனந்த் | விஜய்

விஜய் தந்தை ஆழ்ந்த தியானம்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திருத்தணி முருகன் கோவிலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் செய்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி கிழக்கிலும் விஜய் முன்னிலை!

விஜய்

திருச்சி கிழக்கு: விஜய் 4,583 வாக்குகள் பெற்று திமுகவை விட முன்னிலையில் இருக்கிறார். திமுக 4201 வாக்குகள் பெற்றிருக்கிறது.

ஸ்டார் வேட்பாளர்கள் முன்னணி நிலவரம்!

தபால் வாக்குகளில் முந்தும் திமுக..! – முன்னணி நிலவரம்!

தமிழகமே எதிர்பார்க்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

தபால் வாக்குகளின் எண்ணிக்கையானது தற்போது வெளியாகி வருகிறது தற்போதைய நிலையில் திமுக கூட்டணி 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி இரண்டு இடங்களிலும் தவெக இரண்டு இடங்களிலும் முன்னிலை இருக்கிறது.

மயிலாப்பூர்: தபால் வாக்கு வித்தியாசத்தில் தமிழிசை 3 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்

தமிழிசை செளந்தரராஜன்

தபால் வாக்கு – சேப்பாக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலை

உதயநிதி – சேகர் பாபு

சேப்பாக்கம் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை.

திருவிக நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் முன்னிலை

தபால் வாக்கு – பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் முன்னிலை

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 தபால் வாக்குகள் பெற்று முன்னிலை.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் ஆர். டி. சேகர் பெரம்பூரில் 25 வாக்குகள் பெற்று பின்னடைவு.

வாக்கு எண்ணிக்கை அப்டேட்ஸ்!

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பதிவான வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தபால் வாக்குகளை எண்ணுவதற்காகவும் 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, காட்பாடி, வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் தலா 4 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகின்றன. அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு மட்டுமான தபால் வாக்குகள் 5 மேஜைகளில் எண்ணப்படுகின்றன.

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

தபால் வாக்குகள்
தபால் வாக்குகள்

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழகமே எதிர்பார்க்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி இருக்கிறது. தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவு கூடுதல் பரபரப்புடனும் தீவிரத்துடனும் காணப்படுகிறது. முதலில் தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் அதனை தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

பச்சை நிற தலைப்பாகை.!

தென்காசி சட்டமன்ற தொகுதி விவசாயிகள் சங்கம் சார்பில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் விவசாயி துரைராஜ் வாக்கு எண்ணுகை மையத்திற்கு தலையில் பச்சை நிற தலைப்பாகையுடன் வந்ததால் போலீசார் அனுமதி மறுத்தனர். வேட்பாளர் போலீசாருடன் நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு பச்சை நிற தலைப்பாகையுடன் வாக்கு எண்ணுகை மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.

மஞ்சள் துண்டு அணிந்த வந்த திமுகவினர்! – அகற்றிய போலீஸ்! 

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தி.மு.க. பூத் ஏஜென்ட்கள் மஞ்சள் துண்டு அணிந்த வந்த நிலையில், போலீசார் அதனை அகற்றினர்

இருப்பினும் மஞ்சள் நிற டேக் அணிந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வந்துள்ளனர்.

வாக்குப்பதிவின் போதும் வாக்குப்பதிவு மையத்திற்குள் தி.மு.க. பூத் ஏஜென்ட்கள் மஞ்சள் நிற துண்டு அணிந்து பணியாற்றியதும், சில இடங்களில் அதிகாரிகள் அந்த துண்டை அகற்றியதும் குறிப்பிடத்தக்கது.!

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அணிந்த வந்த மஞ்சள் துண்டிற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் செந்தில் பாலாஜி மஞ்சள் துண்டை அகற்றிவிட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வந்தார்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

தமிழகமே எதிர்பார்க்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. வழக்கமாக இருமுனைப் போட்டி மும்முனை போட்டி என இருக்கும் தமிழக அரசியல் களம், இம்முறை தமிழக வெற்றிக் கழகம் என கட்சியை தொடங்கி நேரடி அரசியலில் களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜயின் காரணமாக நான்கு முனை போட்டியாக மாறி இருக்கிறது.

இதனால் தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவு கூடுதல் பரபரப்புடனும் தீவிரத்துடனும் காணப்படுகிறது.

இன்று காலை 8 மணி முதல் தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் அதனை தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – தேசிய அளவில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. ‘திராவிட மாடல் 2.0’ என்ற முழக்கத்துடன் தெம்பாக இருக்கும் திமுக கூட்டணி, ‘இந்த முறை நிச்சயம் எங்கள் ஆட்சிதான்’ எனக் களமாடும் அதிமுக கூட்டணி ஒருபுறம், ‘மாற்று அரசியல்’ என்ற கோட்பாட்டுடன் தேர்தல் அரசியலில் தனித்து இயங்கும் நாம் தமிழர் கட்சி, `எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என அன்ப்ரெடிக்டபிளாக இருக்கும் புது வரவு த.வெ.க மறுபுறம் என, நான்குமுனைப் போட்டியால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி புதிய சாதனையும் நிகழ்ந்திருக்கிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதமாகும்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளில் சுமார் 3.75 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 4,023 வேட்பாளர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தேர்தல் திருவிழாவின் க்ளைமாக்ஸ்!

அனைத்து வாக்குச்சாவடிகளும் ‘நேரலை இணையக் கண்காணிப்பு’ (Live Webcasting) மூலம் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக வரலாற்றில் மிக அமைதியாகவும், அதேசமயம் மிக அதிக எண்ணிக்கையிலும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் திருவிழாவின் க்ளைமாக்ஸான வாக்கு எண்ணிக்கையானது நாளை (மே 4-ம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, 62 மையங்களில் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணும் மையத்தின் தபால் வாக்குகளும், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மற்றொரு பகுதியிலும் எண்ணப்படவிருக்கின்றன. 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

வாக்குப்பதிவின் போது சில இடங்களில் அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு நிலவியது. எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கையின் தொடர் நிலவரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பெறலாம். இணைந்து இருங்கள்.!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

TVK: Shocking mistake; does the game turn upside down in the first hour? – What does it say?

“Definitely DMK rule” – Habeesulla Interview | TN Election Results 2026 | Vikatan