TN Exit Poll 2026 LIVE : `தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியா?’ – CNN, Times Now (JVC) கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

Axis My India

திமுக கூட்டணி – 92 – 110

அதிமுக கூட்டணி – 22 – 32

தவெக – 98 – 120

மற்றவை – 0

`தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியா?’ – CNN, Times Now (JVC) கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

திமுக கூட்டணி – 103 – 113

அதிமுக கூட்டணி – 114 – 124

தவெக – 04 – 10

மற்றவை – 0

Times Now (JVC)

திமுக கூட்டணி – 75 – 95

அதிமுக கூட்டணி – 128 – 147

தவெக – 08 – 15

மற்றவை – 0

அக்னி

திமுக கூட்டணி – 169

அதிமுக கூட்டணி – 64

தவெக – 01

மற்றவை – 0

P-MARQ

திமுக கூட்டணி – 125 – 145

அதிமுக கூட்டணி – 65 – 85

தவெக – 16 – 26

மற்றவை – 1 – 6

சாணக்யா ஸ்டாட்டர்ஜிஸ்

திமுக கூட்டணி – 145 – 160

அதிமுக கூட்டணி – 50 – 65

தவெக – 13 – 18

மற்றவை – 5 – 8

ரிபப்ளிக் பி – மார்க்

திமுக கூட்டணி – 125 – 145

அதிமுக கூட்டணி – 65 – 85

தவெக – 16 – 26

மற்றவை – 1- 2

NDTV + Peoples Pulse

திமுக கூட்டணி – 125 – 145

அதிமுக கூட்டணி – 65 – 80

தவெக – 18 – 24

மற்றவை – 2 – 6

`87 – 110 இடங்கள் – Matrize’- டஃப் கொடுக்கிறதா அதிமுக? | தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு

MATRIZE

திமுக கூட்டணி – 122 – 132

அதிமுக கூட்டணி – 87 – 110

தமிழக வெற்றிக் கழகம் – 10 – 12

மற்றவை – 0 -6

பெரும்பான்மை…

சட்டமன்றத் தேர்தல் 2026
சட்டமன்றத் தேர்தல் 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 234. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்குமுனைப் போட்டியில், ஒரு கட்சி ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நான்கு பிரதானக் கட்சிகளும் பெரும்பான்மை பெறாதபட்சத்தில் அது ‘தொங்கு சட்டமன்றம்’-மாக கருதப்படும். எனவே, ஆளுநர் மிகப்பெரிய ஒற்றைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்தவர்களை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லலாம். ஆளுநரால் அழைக்கப்பட்ட முதலமைச்சர், சட்டமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதில் தோல்வியுற்றால் அந்த அரசு கவிழும். எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடித்தால், ஆளுநரின் பரிந்துரையின் பேரில் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம். பின்னர் 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க போவது யார்?

தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

கடந்த ஏப்ரல் 9, ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என மூன்று தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தவிர இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடக்கும் மேற்குவங்கம் மாநிலத்திற்கு முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று (ஏப்ரல் 29) நடைபெறுகிறது.

TN Assembly Elections 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் 30ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதற்கிடையில் கூட்டணி கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை, சீட் ஒதுக்கீடு, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என களம் சூடுபிடித்தது.

ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்தது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் நடந்த 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வாக்குபதிவுகள் பதிவாகியிருந்தன.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 85.15% வாக்குகள் பதிவாகி இருந்தன.

மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் அனைவரும் எதிர்பார்த்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று மாலை 6.30 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Who has the chance of victory in Tamil Nadu and Puducherry? What do the opinion polls say?