திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டுள்ளார். தமிழகத்தை ஆளப்போகும் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். அவருடைய தொலைநோக்குச் சிந்தனையை மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தை முன்னிறுத்தி அவர் முன்னெடுக்கும் இந்த அரசியல் பயணம் உலகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் ஏற்கனவே பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சிகளைக் கண்டுள்ளது. தற்போது நான்காவதாகத் தவெக தலைவர் தளபதியின் ‘விசில் புரட்சி’ நடைபெறப் போகிறது.
வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அரியணையில் அமரும்.
யார் எத்தகைய கருத்துக்களைக் கூறினாலும் தவெக-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அது வெறும் ‘அல்வா’ பேச்சுகளாகவே முடியும்” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.