English
ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முகமது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. எனினும், இந்த பரிந்துரைக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
Tamil
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்பு
ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முகமது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. எனினும், இந்த பரிந்துரைக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
Click the link above to read the full article on the original website.