Iran: சொன்னதைச் செய்த ஈரான்; அமெரிக்கா IT நிறுவனமான ‘Amazon’ நிறுவனம் மீது தாக்குதல்

நாளையோடு ஈரான் போர் ஐந்தாவது வாரத்தை நிறைவு செய்கிறது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது.

தாக்குதல்

நேற்று ஈரானின் புரட்சிகரக் காவல்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ‘ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து, அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், மெட்டா உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈரான் போர்
ஈரான் போர்

அதே போல, நேற்று பஹ்ரைனில் உள்ள அமேசான் வலை சேவைகள் (Amazon Web Services (AWS)) மீது தாக்குதலை நடத்தி உள்ளது ஈரான்.

இந்தத் தாக்குதலால் அமேசான் நிறுவனம் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், என்னென்ன தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது இன்னும் தெரியவில்லை.

என்ன பிரச்னை?

ஈரான் தாக்கியுள்ள பஹ்ரைன் அமேசான் வலை சேவைகள் அமேசான் நிறுவனத்தின் முக்கியமான ஒன்று. இங்கேதான் மேற்கு ஆசிய நாடுகளில் நடக்கும் அமேசானின் பிசினஸ், நிதி, அரசு வலைதளங்கள் ஆகியவை பராமரிக்கப்படுகின்றன.

இவற்றில் பாதி அழிக்கப்பட்டாலும், தரவுகள் எடுப்பதில் இருந்து இணைப்பு, சேவை என அனைத்தும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கு அமெரிக்காவின் பதிலடி என்னவாக இருக்குமோ?


மூலதளம்: International
Click the link above to read the full article on the original website.

More From Author

Iran: Iran acted on its word; attack on American IT company ‘Amazon’

Iran war: China provided advanced intelligence equipment – USA Trump shocked