கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக ஆசி. தியாகராஜன் அறிவிக்கப்பட்டதிலிருந்து கரூர் தி.மு.க நிர்வாகிகள் பொறுமிக்கொண்டிருக்கின்றனர்.
கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடாததால், இங்குள்ள தி.மு.க-வினர் சேர்வடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியானது. இது பற்றி விசாரிக்க களம் இறங்கினோம்…
`தயவு செய்து பெயரை மட்டும் போட்டு விடாதீர்கள்’ எனக் கூறிய கட்சி நிர்வாகிகள் சிலர், “காலம் காலமாக கட்சிக்கு வேலை பார்த்து வரும் சீனியர்கள் பலர் தொகுதியில் இருக்க, 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி போராட்டங்கள், சிறைவாசம் எனக் கட்சிக்காக வாழ்க்கையே தியாகம் செய்தவர்கள் கரூர் மாவட்டத்தில் பலர் இருக்க அதில், ஒருவர் கூட கட்சி தலைமைக்குத் தெரியாமல் போய்விட்டது?
தி.மு.க அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு வேட்பாளர் தேர்வு நடந்திருக்காது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் கரூர் மாவட்ட தி.மு.க-விற்கு இப்படி ஒரு அநீதி நடந்திருக்காது” எனத் புலம்பித் தள்ளினர்.
“2026 சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கட்சி தலைமை முடிவு செய்து விட்டதாம்.
இதனால், கரூரில் இருந்து தனது ஆதரவாளர்கள் சிலரை கோவைக்கு இடம் மாற வைத்து சரியான அடித்தளத்தை அமைத்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்பது தெரிந்தும், கட்சிக்கு விசுவாசமாக, உண்மையாகப் பாடுபட்டு வரும் பலர் இருக்க அதில் யாராவது ஒருவரைத் தேர்வு செய்து நிறுத்தி இருக்கலாம். ஆனால், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதால், கட்சிக்குத் தொடர்பு இல்லாத ஆசி.தியாகரஜனுக்கு சீட் வாங்கி கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.

உண்மையான கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெளிய சொல்ல முடியாதளவிற்குக் கொதித்துப் போய் உள்ளனர். செந்தில் பாலாஜிதான் கட்சி தொண்டர்களை மறந்து விட்டார் என்றால்? தி.மு.க தலைமையுமா கரூர் நிர்வாகிகளை மறந்து விட்டது? கட்சிக்காக காலம் முழுதுவம் பாடுபடும் தொண்டர்களுக்கு தலைமை கொடுக்கும் வெகுமதி இதுதானா?” எனச் சர வெடியாய் வெடிக்கின்றனர்.
யார் இந்த தியாகராஜன்?
65 வயதான ஆசி. தியாகராஜன் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி பட்ட படிப்பு முடித்த இவர், விவசாய மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருகிறார். கரூர் தான்தோன்றி மலை வெங்கட்ரமண சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர், உப்பிடமங்கலம் விவசாயிகள் நுண்ணுயிர் நீரேற்று பாசன சங்கத் தலைவர் இவைதான் இவரது அரசியல் அனுபவம். இவருக்கு சீட்டு கொடுத்து இருப்பதால் கரூர் தி.மு.க-வினருக்கு மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.