தவெக: “அத்தனை வலியையும் தாங்கிட்டு உங்களுக்காக வரேன்!’ – விஜய் எமோஷனல்

தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டுமென வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை கூறியிருந்தார்.

விஜய்
விஜய்

விஜய் பேசியதாவது, ”நம்ம கட்சிக்காரங்களுக்கு தேர்தலை எதிர்கொண்ட அனுபவம் இல்லையென்று சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எம்.எல்.ஏ என்பவர் அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பவர்களாக இருக்கக்கூடாது.

எம்.எல்.ஏன்னா மக்களோட நிக்குற எல்லை காப்பானா நிக்கணும். மக்களோட நிக்குற மாதிரி வேட்பாளர்களைப் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன். அவங்களை எம்.எல்.ஏ ஆக்க வேண்டியது உங்க பொறுப்பு.

கூட்டம் ஓட்டா மாறிடுமான்னு வன்மத்துல கேள்வி கேட்குறவங்களுக்கு நான் பதில் சொல்றேன். இது இருமுனை தேர்தல்தான். ஸ்டாலின் சாரோட கூட்டணிக்கும் நம்ம கூட்டணிக்கும்தான் போட்டி. அது என்ன கூட்டணி? மக்கள் நலக்கூட்டணியா? உடைஞ்ச க்ளாஸ ஒட்ட வச்ச மாதிரி ஒரு கூட்டணி.

வேட்பாளர்களுடன் விஜய்
வேட்பாளர்களுடன் விஜய்

உங்க வீட்ல இருக்குற ஒவ்வொருத்தரையும் ஏப்ரல் 23 ஆம் தேதி கூட்டிட்டு போயி ஓட்டு போடுங்க. வெளியூர்ல இருக்குறவங்க இப்போவே டிக்கெட் போட்ருங்க. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். அத்தனை வசதிகளையும் துறந்துட்டு உங்களுக்கு நன்றிக்கடனைச் செலுத்த மட்டுமே வந்திருக்கேன்.

அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக வந்திருக்கேன். உங்க வீட்டுப் பிள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. யார் வேட்பாளரா இருந்தாலும் அது விஜய்னு நினைச்சு ஓட்டு போடுங்க. ஒரு நாளும் உங்களை பொய் சொல்லி ஏமாத்த மாட்டேன். மக்கள் விரோத ஸ்டாலின் சார் வேண்டுமா? மக்களை நேசிக்கிற விஜய் வேண்டுமா?” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

A father tied the hands and feet of his daughters and hung them from the roof repeatedly – What happened? Mother in tears.

‘75% of jobs in Tamil Nadu for Tamil Nadu youth only…’ – Promises made by Vijay!