English
தென்காசி/ திருநெல்வேலி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 32 மி.மீ., அடவிநயினார் அணையில் 29 மி.மீ., செங்கோட்டையில் 24 மி.மீ., கடனாநதி அணையில் 16 மி.மீ., கருப்பாநதி அணையில் 19.50 மி.மீ., ஆய்க்குடியில் 12 மி.மீ., சிவகிரியில் 7 மி.மீ., ராமநதி அணை, தென்காசியில் தலா 3 மி.மீ. சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 58 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 57.75 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 123.25 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பழைய குற்றாலம் அருவிக்கரை, பிரதான அருவிக்கரை பகுதிகளில் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்தன. இதனால் இந்த அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
Tamil
மழை வெள்ளத்தில் கடும் சேதம்: பழைய குற்றாலம் அருவியில் குளிக்க தடை
தென்காசி/ திருநெல்வேலி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 32 மி.மீ., அடவிநயினார் அணையில் 29 மி.மீ., செங்கோட்டையில் 24 மி.மீ., கடனாநதி அணையில் 16 மி.மீ., கருப்பாநதி அணையில் 19.50 மி.மீ., ஆய்க்குடியில் 12 மி.மீ., சிவகிரியில் 7 மி.மீ., ராமநதி அணை, தென்காசியில் தலா 3 மி.மீ. சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது.
கடனாநதி அணை நீர்மட்டம் 58 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 57.75 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 123.25 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பழைய குற்றாலம் அருவிக்கரை, பிரதான அருவிக்கரை பகுதிகளில் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்தன. இதனால் இந்த அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
Click the link above to read the full article on the original website.