கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும்.
ஆனால், ஈரானைத் தாண்டி துபாய், கத்தார், குவைத், லெபனான் போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடந்து வருகின்றன.
எந்தெந்த நாடுகள் எந்தெந்த நாடுகளை தாக்குகின்றன?
தங்கள் மீதான தாக்குதலால் இஸ்ரேல், பஹ்ரைன், அபுதாபி, துபாய், கத்தார், குவைத், ஈராக், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகளின் மீது ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி வருகிறது ஈரான்.
ஈரானைத் தாண்டி லெபனான் மீதும் தாக்குதல் நடத்துகின்றன அமெரிக்கா, இஸ்ரேல்.

ஈரானுக்கு இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் தானே பிரச்னை, இதில் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் ஏன் தாக்குதல் நடத்துகிறது என்கிற கேள்வி எழலாம். அந்தக் கேள்விக்கான பதில்…
‘பழிக்கு பழி’ நடவடிக்கையாக இஸ்ரேலைத் தாக்கி வருகிறது ஈரான். ஆனால், அப்படி அமெரிக்காவை தாக்க முடியாது.
காரணம், இஸ்ரேலும், ஈரானும் ஓரளவுக்கு பக்கத்து நாடுகள். ஆனால், அமெரிக்கா அப்படி இல்லை.
இதனால், ஈரான் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்க நிலை படைகளைத் தாக்குகிறது. இதன் மூலம், அமெரிக்காவை பழி வாங்குகிறது ஈரான்.
ஜோர்டான் போன்ற நாடுகள், இஸ்ரேல் மீது ஈரான் ஏவும் ஏவுகணைகளை இடைமறித்து வீழ்த்துகின்றன. அதனால், அந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்துகிறது ஈரான்.
அடுத்து அமெரிக்காவிற்கு பொருள்கள் செல்லும் முக்கியப் போக்குவரத்து நாடுகளை அந்தப் போக்குவரத்து வழிகளைக் குறி வைத்துத் தாக்குகிறது ஈரான்.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகளையும் குறி வைக்கிறது ஈரான்.
ஈரான் பிற நாடுகள் மீது நடத்தும் அனைத்து தாக்குதல்களும் இஸ்ரேல், அமெரிக்கா மீதான தாக்குதல் தான்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுடன் லெபனான் மீது தாக்குதல் நடத்த காரணம், அது ஈரானுக்கு செய்யும் உதவி தான்.
லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பு ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் இறப்பிற்குப் பிறகு, ஈரானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. அதனால், அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.