English
சென்னை: நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் வந்துள்ள 3 மத்திய குழுக்களும் இன்று (அக்.25) முதல் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட ஆய்வை தொடங்குகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள் உட்பட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்த நெற்பயிரில் 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
Tamil
தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு நிர்ணயம்: மத்திய குழுக்கள் இன்று முதல் ஆய்வு
சென்னை: நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் வந்துள்ள 3 மத்திய குழுக்களும் இன்று (அக்.25) முதல் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட ஆய்வை தொடங்குகின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள் உட்பட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்த நெற்பயிரில் 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.