“சீனாவுடன் ‘இந்த’ ஒப்பந்தம் இல்லை” – கார்னி விளக்கம்; ட்ரம்பிற்கு அஞ்சுகிறதா கனடா?

சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி.

இந்தச் சந்திப்பிற்கு பிறகு, “கனடா மற்றும் சீனா – இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக தடை, வரிப் பிரச்னை ஆகியவைகளைக் குறைக்கும் ‘மைல்கல்’ வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்நிலையை அடைந்துள்ளோம்” என்று கூறினார் கார்னி.

‘ஒப்பந்தம்’ என்று கார்னி குறிப்பிட்டது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்று பொருள் கொள்ளப்பட்டது.

இது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

மார்க் கார்னி - ஜி ஜின்பிங்
மார்க் கார்னி – ஜி ஜின்பிங்

ட்ரம்ப் எச்சரிக்கை

இதனால், சீனா உடன் கனடா ஒப்பந்தம் போட்டால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருள்களுக்கும் உடனடியாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார் ட்ரம்ப்.

கார்னி விளக்கம்

உடனே, ட்ரம்ப்பின் கூற்றிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார் கார்னி…

“சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம்”.

இது கிட்டத்தட்ட ‘பேக்’ அடித்தல் என்றே எடுத்துக்கொள்ளலாம்.

ஏன்?

அமெரிக்க வலைதளத்தின் படி, 2024-ம் ஆண்டு, கனடா தனது தயாரிப்புகளில் நான்கில் மூன்று பங்கு பொருள்களை அமெரிக்காவிற்குத் தான் ஏற்றுமதி செய்துள்ளது.

அப்படிப்பட்ட ஒரு சந்தையை நிச்சயம் கனடா இழக்க விரும்பாது என்பது தான் இந்தப் ‘பேக்’கிற்கான காரணம்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Sankey drum, Juju Jaja dance, the bravery of warriors; Republic Day parade celebration in Chennai!

Padma Awards: “Mammootty, Madhavan, Rohit Sharma” – Stars Who Gained Nationwide Attention in India!