English
AMMK General Secretary TTV Dhinakaran has announced that they will be joining the NDA alliance. He made this decision after consulting with district secretaries. After meeting with the officials at the AMMK office in Adaiyarkoil, TTV Dhinakaran spoke to journalists, saying, "I had already discussed the suspension of Inna Seitharai in the general council. Those who left will not be harmed. I have taken this decision considering the welfare of the party and Tamil Nadu. Amma's rule, Amma's workers will unite and bring Amma's rule back. I will speak in more detail after meeting Pius Coy."
In a few minutes, DTV is going to meet BJP's Tamil Nadu election in-charge Piyush Goyal at a private hotel in Chennai to sign the alliance agreement. With Prime Minister Modi scheduled to visit Tamil Nadu on the 23rd, BJP is rapidly making moves.
Tanglish
En.Di.E koottaniyil inaiyap povadaga Amamuga pothucheyalalar TTV Dhinakaran arivithirukkirar. Mavattach cheyalalargaludan kalandhalositha piragu inda mudivai eduthirukkirar. TTV Dhinakaran Adaiyaaril ulla Amamuga aluvakathil nirvagigaludan koodi pesivittu pathirikaiyalarhalai sandhitha TTV, 'Inna seytharai oruththal ena pothukuzhuvileye pesiyirundhen. Vittuk koduthavargal kettupovathillai. Katchiyin nalanaiyum Tamilnattin nalanaiyum karuthil kondu inda mudivai eduthirukkiren. Ammaavin aatchi Ammaavin thondargal oraniyil thirandu Ammaavin aatchiyai meendum kondu varuvom. Pius Koyalai sandhithap piragu innum virivaga pesugiren' endrar. TTV.
Dinakaran innum sila nimidangalil Chennaiyil ulla thaniyaar hotel ondril BJPvin Tamilaga therthal poruppaalar Pius Goyalai sandhiththu koottani oppandathil kaiyezhuththidavirukkiraar TDV. Prathamar Modi 23 aam thethi Tamilagam varum soozhalil vegavegamaaga kaai nagarththik kondirukkiradhu BJP.
Tamil
என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கூடி பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி, ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் என பொதுக்குழுவிலேயே பேசியிருந்தேன். விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. கட்சியின் நலனையும் தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
அம்மாவின் ஆட்சி
அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். பியூஸ் கோயலை சந்தித்தப் பிறகு இன்னும் விரிவாக பேசுகிறேன்’ என்றார்.

இன்னும் சில நிமிடங்களில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறார் டிடிவி. பிரதமர் மோடி 23 ஆம் தேதி தமிழகம் வரும் சூழலில் வேகவேகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது பாஜக.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.