English
மும்பை: மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் நள்ளிரவுக்குப் பின் சுமார் 12.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், தீ 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் 8 தீ அணைப்பு வாகனங்களில் 40 தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.
Tamil
நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு; 14 பேர் காயம்
மும்பை: மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் நள்ளிரவுக்குப் பின் சுமார் 12.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், தீ 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் 8 தீ அணைப்பு வாகனங்களில் 40 தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.