English
கடலூர்: தங்களது சொந்த ஊருக்கு உயர் கோபுர மின் விளக்கு அமைத்து வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினரை கடலூர் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி கவுரவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதி விரைவு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி, கடலூர் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார். தனது சொந்த கிராமம் கொங்கராயனூர் பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்தோடு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதோடு, சில சமூக விரோத செயல்களும் நிகழ்ந்துள்ளது.
Tamil
சொந்த ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினர்: கடலூர் எஸ்பி பாராட்டு
கடலூர்: தங்களது சொந்த ஊருக்கு உயர் கோபுர மின் விளக்கு அமைத்து வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினரை கடலூர் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி கவுரவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதி விரைவு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி, கடலூர் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார். தனது சொந்த கிராமம் கொங்கராயனூர் பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்தோடு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதோடு, சில சமூக விரோத செயல்களும் நிகழ்ந்துள்ளது.
Click the link above to read the full article on the original website.