114 வயதில் காலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம், துமகூரு மாவட்​டம் குப்​பியை அடுத்​துள்ள குனிகலை சேர்ந்​தவர் சாலுமரத திம்​மக்​கா(114). திரு​மண​மாகி குழந்தை பாக்​கி​யம் அமை​யாத​தால் தனது கணவருடன் இணைந்து கர்​நாடக மாநிலம் முழு​வதும் பயணம் செய்து லட்​சக்​கணக்​கான மரங்​களை நட்​டார்.
இதனால் மரங்​களின் தாய் என சாலுமரத திம்​மக்கா அழைக்​கப்​பட்​டார். இவரது சேவைக்காக கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, மத்​திய அரசு பத்​மஸ்ரீ விருது வழங்​கி​யுள்​ளது.

முது​மை​யின் காரண​மாக திம்​மக்கா பெங்​களூரு​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். இதைத்​தொடர்ந்து கலா கிராமத்​தில் முழு அரசு மரி​யாதை​யுடன் திம்​மக்​கா​வின் உடல் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆந்திரா ரூ.13 லட்சம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

லாலு குடும்பத்தில் வெடிக்கும் கோஷ்டி மோதல்: அரசியலில் இருந்து விலகுவதாக மகள் ரோகிணி அறிவிப்பு