English
சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் அக்.21-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
Tamil
வங்கக்கடலில் அக்.21-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் அக்.21-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
Click the link above to read the full article on the original website.