English
அமராவதி: ‘‘மோந்தா புயலால் ஆந்திர மாநிலத்தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆந்திர மாநிலம், நரசாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோந்தா புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால் ஆந்திராவில் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்கள் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கில் கால்நடைகள் இறந்தன. இன்னமும் பிரகாசம், ஓங்கோல், கோனசீமா, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் வெள்ள பாதிப்பால் தவித்து வருகின்றனர். பலர் வீடுகளை இழந்து வாடுகின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு தரப்பில் தலா ரூ.1,000 நிதி உதவி வழங்கப்பட்டு,
அத்தியாவசிய பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
Tamil
மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்
அமராவதி: ‘‘மோந்தா புயலால் ஆந்திர மாநிலத்தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், நரசாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோந்தா புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால் ஆந்திராவில் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்கள் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கில் கால்நடைகள் இறந்தன. இன்னமும் பிரகாசம், ஓங்கோல், கோனசீமா, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் வெள்ள பாதிப்பால் தவித்து வருகின்றனர். பலர் வீடுகளை இழந்து வாடுகின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு தரப்பில் தலா ரூ.1,000 நிதி உதவி வழங்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
Click the link above to read the full article on the original website.