English
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துவிட்டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்பதைப் போல முக்கியக் கட்சிகள் அனைத்தும் அதை ஒரு பிரதானப் பிரச்சினையாக பேசி வரும் நிலையில், “மாநில அந்தஸ்துக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை. மாநில அந்தஸ்து இருந்தால் தான் சிறப்பான ஆட்சி நடத்த முடியும் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது” என புதிதாக ஒரு கருத்தைப் பேசி இருக்கிறது புதுச்சேரி அதிமுக. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன், “மாநில அந்தஸ்தை அரசியலுக்காக எல்லோரும் பயன்படுத்துகின்றனர். முதல்வரும் பயன்படுத்துகிறார்.
மாநில அந்தஸ்து இல்லாமலேயே புதுச்சேரி நல்ல நிலைமைக்கு வரவில்லையா? ரங்கசாமி ஏற்கெனவே ஒருமுறை முதல்வராக இருந்தபோது, தான் அறிவித்த திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தினாரே… இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக புதுச்சேரி அப்போது இருந்ததே!
Tamil
‘மாநில அந்தஸ்துக்கும் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை!’ – புதுசா பேசும் புதுச்சேரி அதிமுக
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துவிட்டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்பதைப் போல முக்கியக் கட்சிகள் அனைத்தும் அதை ஒரு பிரதானப் பிரச்சினையாக பேசி வரும் நிலையில், “மாநில அந்தஸ்துக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை. மாநில அந்தஸ்து இருந்தால் தான் சிறப்பான ஆட்சி நடத்த முடியும் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது” என புதிதாக ஒரு கருத்தைப் பேசி இருக்கிறது புதுச்சேரி அதிமுக.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன், “மாநில அந்தஸ்தை அரசியலுக்காக எல்லோரும் பயன்படுத்துகின்றனர். முதல்வரும் பயன்படுத்துகிறார். மாநில அந்தஸ்து இல்லாமலேயே புதுச்சேரி நல்ல நிலைமைக்கு வரவில்லையா? ரங்கசாமி ஏற்கெனவே ஒருமுறை முதல்வராக இருந்தபோது, தான் அறிவித்த திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தினாரே… இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக புதுச்சேரி அப்போது இருந்ததே!
Click the link above to read the full article on the original website.