மாநகராட்சியின் மெத்தனத்தால் வெள்ளக்காடான நெல்லை – பள்ளிகளுக்கு மழை விடுமுறை

English

திருநெல்வேலி/ தென்காசி: தென் மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் இன்றும் நீடிக்கிறது. திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், திருநெல்வேலி மாநகரம் வெள்ளக்காடானது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரையிலும் பலத்த மழை பெய்தது. மாலையில் மீண்டும் மழை தொடங்கி பெய்தது.


Tamil

மாநகராட்சியின் மெத்தனத்தால் வெள்ளக்காடான நெல்லை – பள்ளிகளுக்கு மழை விடுமுறை

திருநெல்வேலி/ தென்காசி: தென் மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் இன்றும் நீடிக்கிறது. திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், திருநெல்வேலி மாநகரம் வெள்ளக்காடானது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரையிலும் பலத்த மழை பெய்தது. மாலையில் மீண்டும் மழை தொடங்கி பெய்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு அளித்தவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சொல்லி கடிதம்!

தாமதமாகும் மணிகாவின் விசா