English
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புகழ்பெற்ற இளம் நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்தார். பிஹாரின் மதுபானி மாவட்டத்தில் பிறந்த மைதிலி தாக்கூர், தனது 14-வது வயதில் இருந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். டெல்லியில் வசித்து வரும் மைதிலி தாக்கூர் இந்தி, பெங்காலி, மைதிலி, உருது, மராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும் பிஹார் பொறுப்பாளருளான வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரை இவர் சந்தித்ததையடுத்து, இவர் அக்கட்சியில் இணைய இருப்பதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வந்தன.
Tamil
பிஹார் தேர்தல்: பாஜகவில் இணைந்தார் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர்
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புகழ்பெற்ற இளம் நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்தார்.
பிஹாரின் மதுபானி மாவட்டத்தில் பிறந்த மைதிலி தாக்கூர், தனது 14-வது வயதில் இருந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். டெல்லியில் வசித்து வரும் மைதிலி தாக்கூர் இந்தி, பெங்காலி, மைதிலி, உருது, மராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும் பிஹார் பொறுப்பாளருளான வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரை இவர் சந்தித்ததையடுத்து, இவர் அக்கட்சியில் இணைய இருப்பதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வந்தன.
Click the link above to read the full article on the original website.