English
தமிழகத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணியில் பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற போர்வையில் குடியுரிமைச் சட்டம் -1955ன்கீழ் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை தேர்தல் ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. உள்ளுர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு குடியுரிமை குறித்து முடிவு செய்ய அதிகாரம் அளிப்பதன் மூலம் மக்களின் குடியுரிமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்து பேசாமல் தேர்தல் ஆணையம் இத்தகைய நடைமுறைகளை தன்னிச்சையாக திணிப்பது கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் செயலாகும்.
Tamil
பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம்: செல்வப்பெருந்தகை சந்தேகம்
தமிழகத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணியில் பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற போர்வையில் குடியுரிமைச் சட்டம் -1955ன்கீழ் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை தேர்தல் ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. உள்ளுர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு குடியுரிமை குறித்து முடிவு செய்ய அதிகாரம் அளிப்பதன் மூலம் மக்களின் குடியுரிமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்து பேசாமல் தேர்தல் ஆணையம் இத்தகைய நடைமுறைகளை தன்னிச்சையாக திணிப்பது கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் செயலாகும்.
Click the link above to read the full article on the original website.