பங்குச் சந்தை இறக்கம் முடிவுக்கு வருகிறதா? – மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்?

இந்தியப் பங்குச் சந்தையானது கடந்த ஒரு மாத காலமாகவே இறக்கத்தின் போக்கில் இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் Vs ஈரான் போர் தொடங்கிய பின் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கத்தின் போக்கில்தான் உள்ளன.

இந்த நிலையில், நேற்று திங்கள்கிழமையும், இன்று செவ்வாய்க்கிழமை அன்றும் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தின் போக்கில் முடிவடைந்தன. நேற்று திங்கள்கிழமை அன்று நிஃப்டி 255 புள்ளிகளும், சென்செக்ஸ் 787 புள்ளிகளும் உயர்ந்தன. இன்று செவ்வாய்க்கிழமை அன்று நிஃப்டி 155 புள்ளிகளும் சென்செக்ஸ் 509 புள்ளிகளும் ஏற்றம் அடைந்துள்ளன.

கடந்த சில வாரங்களுக்குப் பிறகு பங்குச் சந்தை ஓரளவுக்கு உயர்ந்து நிஃப்டி 23 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 74,500 புள்ளிகளுக்கு மேலும் வர்த்தகம் ஆவது பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடையே புதிய உற்சாகத்தை உருவாக்கி உள்ளது.

சுனில் சுப்பிரமணியம்

இறக்கத்தில் இருந்து கொஞ்சம் மேலே வந்திருக்கும் பங்குச் சந்தை புள்ளிகளானது தொடர்ந்து உயருமா அல்லது மீண்டும் இறங்குமா, இப்போதுள்ள நிலையில் இருந்து ஃபண்ட் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தொடங்கலாமா என்கிற கேள்விகளுக்கு சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முன்னாள் எம்.டி மற்றும் சி.இ.ஓ மற்றும் சென்ஸ் & சிம்பிளிட்டி (Sense and Simplicity) யுடியூப் மூலம் பங்குச் சந்தை பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லிவரும் பதில் சுனில் சுப்பிரமணியம் பதில் தருகிறார். ‘போரும் சந்தையும் – அத்தியாயம் 24’ என்கிற தலைப்பில் அவர் தினமும் வெளியிடும் காணொளியில் அவர் சொல்லி இருப்பதாவது…

பங்குச் சந்தை ஏற்றம் வருமா?

”திங்கள்கிழமை அன்று பங்குச் சந்தை புள்ளிகள் உயர்ந்தாலும், பங்குச் சந்தை அடிப்படைகள் எதுவும் மாறிய மாதிரி தெரியவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருக்கிறது. டாலரின் மதிப்பும் அதிகமாகவே இருக்கிறது. விக்ஸ் இன்டெக்ஸும் தொடர்ந்து 25 என்பதற்கு மேலே இருக்கிறது. ரூபாயும் மதிப்பும் இனி குறையும் என்கிற நிலையிலேயே இருக்கிறது. தவிர, எஃப்.ஐ.ஐ.களும் பங்குகளை விற்றுவிட்டு, வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படி எல்லா விஷயங்களும் பழைய நிலையிலேயே இருக்க, பங்குச் சந்தைப் புள்ளிகள் மட்டும் எப்படி உயர்ந்தது என்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் எனில், போர்ச் சூழலால் ஏற்பட்ட பாதிப்பைப் புரிந்துகொண்ட பங்குச் சந்தை இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறது. போரினால் பங்குச் சந்தை நல்ல இறக்கம் கண்டுவிட்டது. இனி இந்த நிலையில் இருந்து மெல்ல மெல்ல உயர்வதற்கு பங்குச் சந்தை முயற்சி செய்து வருகிறது.

அமெரிக்க – ஈரான் போர் ஒருபக்கம் நடந்துவந்தாலும், அதனால் இனிமேலும் சந்தை பெரிய அளவில் இறங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ரஷ்யா – உக்ரைன் போர் நடந்துவந்தபோதிலும், ஒரு கட்டத்தில் அதை தாண்டி பங்குச் சந்தை புள்ளிகள் உயர ஆரம்பித்தது போல, அமெரிக்கா – ஈரான் போர் ஒரு பக்கம் நடந்துவந்தாலும், அதையும் தாண்டி சந்தை இனி ஏறத் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கலாம்.

இதற்காக இனி சந்தை இறங்கவே இறங்காது என்று சொல்ல முடியாது. ஆனால், இறக்கம் என்பது ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்திருக்கிறதோ என்கிற யோசிக்க வைக்கிறது இப்போது வந்துள்ள ஏற்றம்” என்று சொல்லும் சுனில் சுப்பிரமணியம், இப்போதுள்ள நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன மாதிரியான முதலீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் சொல்கிறார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

”சந்தை இறக்கம் முடிந்தபிறகு முதலீடு செய்யலாம் என்று காத்திருப்பது சரியான முதலீட்டு முறை அல்ல. சந்தை இறக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம். சந்தை நன்கு இறக்கம் கண்டுள்ள இந்த நிலையில், நீங்கள் குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்திருந்தால், அந்தப் பணத்தைத் தினமும் 1% என்கிற அளவில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்யப் போகிறீர்கள் எனில், தினமும் 1% என்கிற அளவில் அடுத்த 100 நாள்களுக்குத் தொடர்ந்து முடிவு செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் சந்தை இறக்கத்தை சாமார்த்தியமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். சந்தை உயரும்போது நாம் செய்த 1% முதலீடு நன்கு உயர்ந்து, நல்ல லாபத்தைத் தருகிற மாதிரி வாய்ப்பினை நமக்குக் கொடுக்கும்” என்கிறார் சுனில் சுப்பிரமணியம்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு இது சரியான நேரம் ஆகும். இப்போதுள்ள நிலையில், மொத்தமாக முதலீடு செய்யாமல், எஸ்.டி.பி முறையின் மூலம் வாரம் ஒருமுறை அல்லது தினமும் இவ்வளவு என்கிற கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்தால், பங்குச் சந்தை உயர்ந்தபிறகு நல்ல லாபத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பினை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தவறவிடக் கூடாது!

மியூச்சுவல்   ஃபண்டில்   முதலீடு   செய்யணுமா?

இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் – https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்’-ஐத் தொர்புகொள்ளுங்கள் – மிஸ்டு கால்: 9600296001

நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் – https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.


மூலதளம்: International
Click the link above to read the full article on the original website.

More From Author

Is the stock market decline coming to an end? – What can mutual fund investors do now?

Do you know about the legislative assembly constituency that shook Tamil Nadu with the slogan ‘Everything small has been resolved’? | Vote Vibes