English
புதுடெல்லி: நாடு முழுவதும் தெருநாய்களால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில் உரிய காலக்கெடுவுக்குள் பதில்மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சம்மன் பிறப்பித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தலைநகரான டெல்லியில் சிறுவர்களை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அந்தந்த மாநில தலைமைச் செயலர்கள் 8 வார காலத்தில் பதிலளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த ஆக.22-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
Tamil
தெருநாய்கள் வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் நவ.3-ல் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நாடு முழுவதும் தெருநாய்களால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில் உரிய காலக்கெடுவுக்குள் பதில்மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சம்மன் பிறப்பித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தலைநகரான டெல்லியில் சிறுவர்களை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அந்தந்த மாநில தலைமைச் செயலர்கள் 8 வார காலத்தில் பதிலளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த ஆக.22-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
Click the link above to read the full article on the original website.