English
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18,000 போலீஸார் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை பெருநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு,
சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Tamil
தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18,000 போலீஸார் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை பெருநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.