திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள தெப்பம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி காத்தவராயன் (60). இவரது மனைவி ஜோதி (52). இந்நிலையில், காத்தவராயன், மனைவி ஜோதி மற்றும் பேரன் ஹர்சன் (12), பேத்தி ஹர்சினி (9) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி – வத்தலக்குண்டு சாலையில் விருவீடு அருகே காந்திபுரம் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சிறுமி ஹர்சினி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த காத்தவராயன், ஜோதி ஆகியோர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். விபத்து குறித்து விருவீடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Click the link above to read the full article on the original website.