தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த 6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், இது தொடர்​பாக 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அதன்​படி, வேலு​சாமிபுரத்​தில் கடை வைத்​துள்ள வியா​பாரி​கள், பல்​வேறு துறை அதி​காரி​கள், பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்ட போலீ​ஸார், ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தசரா, கந்தசஷ்டி விழாக்களில் 4 லட்சம் பக்தர்களை கையாள உதவிய ‘ஏ.ஐ. ஹைடெக் கட்டுப்பாட்டு’ அறை

சென்னையில் விதிகளை மீறி ஆளுங்கட்சியினர் கொடிகளை பறக்கவிட்டதை வீடியோ எடுத்துள்ளேன்: நீதிபதி குற்றச்சாட்டு