தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாக்களில் சராசரியாக 4 லட்சம் பக்தர்களை கையாள போலீஸாருக்கு உதவும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்ப ஹைடெக் கட்டுப்பாட்டு அறையை நிறுவிய இரு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா, திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா ஆகியவை சமீபத்தில் நடைபெற்றன. இவ்விரு விழாக்களிலும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஹைடெக் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.
Click the link above to read the full article on the original website.