English
சென்னை: ‘சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழக பாஜக சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் ‘சுயசார்பு இந்தியா’வை வலியுறுத்தும் விதமாக சுதேசி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர்,
அனைவரும் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இனிப்பு வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சுதேசி உறுதிமொழியை எடுத்ததன் மூலம், அந்நிய பொருட்களை தவிர்த்து, சுதேசி பொருட்களைப் பயன்படுத்த போகிறோம்.
Tamil
சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
சென்னை: ‘சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழக பாஜக சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் ‘சுயசார்பு இந்தியா’வை வலியுறுத்தும் விதமாக சுதேசி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர், அனைவரும் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இனிப்பு வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சுதேசி உறுதிமொழியை எடுத்ததன் மூலம், அந்நிய பொருட்களை தவிர்த்து, சுதேசி பொருட்களைப் பயன்படுத்த போகிறோம்.
Click the link above to read the full article on the original website.