சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை!

English

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. கொட்டும் மழையிலும் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகவே கடைவீதிகளில் படிப்படியாக வியாபாரம் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் நேற்றும் குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுக்கு புத்தடைகளை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தியாகராய நகர், ரங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டன.


Tamil

சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. கொட்டும் மழையிலும் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகவே கடைவீதிகளில் படிப்படியாக வியாபாரம் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் நேற்றும் குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுக்கு புத்தடைகளை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தியாகராய நகர், ரங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்பு சீன பட்டாசுகள் பறிமுதல்: மும்பை தொழிலதிபர்கள் உட்பட 4 பேர் கைது 

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் போர் நிறுத்தம்: கத்தார் அறிவிப்பு! – ETV Bharat