English
சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இதில் 16 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் இருந்து 4 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். தகுதி சுற்றில் இந்தியாவில் இருந்து அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, வைஷ்ணவி அட்கர், தியா ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றர். அங்கிதா ரெய்னா, ஜப்பானின் மெய் யமகுச்சியுடன் மோதுகிறார். ரியா பாட்டியா, ஜெர்மனியின் கரோலின் வெர்னர்ஜெருடன் பலப்பரீட்சை நடத்துகிறார். வைஷ்ணவி அட்கர்,
ஜப்பானின் மெய் ஹோன்டமாவுடனும் தியா ரமேஷ், ஆஸ்திரேலியாவின் அரினா ரோடினோவாவுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Tamil
சென்னை ஓபன் தகுதி சுற்று இன்று தொடக்கம்
சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இதில் 16 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் இருந்து 4 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
தகுதி சுற்றில் இந்தியாவில் இருந்து அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, வைஷ்ணவி அட்கர், தியா ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றர். அங்கிதா ரெய்னா, ஜப்பானின் மெய் யமகுச்சியுடன் மோதுகிறார். ரியா பாட்டியா, ஜெர்மனியின் கரோலின் வெர்னர்ஜெருடன் பலப்பரீட்சை நடத்துகிறார். வைஷ்ணவி அட்கர், ஜப்பானின் மெய் ஹோன்டமாவுடனும் தியா ரமேஷ், ஆஸ்திரேலியாவின் அரினா ரோடினோவாவுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Click the link above to read the full article on the original website.