சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் சௌமியா அன்புமணி?- பாமக போட்டியிடும் தொகுதிகள், உத்தேச வேட்பாளர்கள்?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு (அன்புமணி அணி) 18 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பா.ம.க போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்த உத்தேச தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பா.ம.க-வின் அரசியல் பயணத்தில் 2016 தேர்தல் தவிர்த்து, 2001 முதல் தற்போது கூட்டணியில் அங்கம் வகித்துதான் தேர்தலைச் சந்தித்து வருகிறது. 2001 -ல் 20 இடங்களில் வெற்றி, 2006 -ல் 18 இடங்களில் வெற்றி, 2011 -ல் 3 இடங்களில் வெற்றி, 2021 தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் அந்தக் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தனியாக ஒரு அணி செயல்பட்டு வருவதால் இந்தமுறை 5 இடங்கள் குறைக்கப்பட்டு, 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த, 18 இடங்கள் எவை என்பது குறித்து உத்தேச தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர், அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, திருப்போரூர், உத்திரமேரூர், போளூர், செஞ்சி, விக்கிரவாண்டி, வானூர், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், இராதாபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இந்தத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், சேலம் மேற்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், சேலம் வடக்கில் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தர்மபுரியில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிபட்டியில் சௌமியா அன்புமணி அல்லது அரசாங்கம், சோளிங்கரில் வழக்கறிஞர் பாலு, அம்பத்தூரில் கே.என்.சேகர், கும்மிடிப்பூண்டியில் பிரகாஷ், திருப்போரூரில் சௌமியா அன்புமணி, செஞ்சியில் இளைஞரணித் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கணேஷ்குமார், விக்கிரவாண்டியில் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், விருத்தாச்சலத்தில் மருத்துவர் தமிழரசி, காட்டுமன்னார்கோவிலில் வடிவேல் இராவணன், மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமி, ஜெயங்கொண்டத்தில் வைத்தி, இராதாபுரத்தில் பொருளாளர் திலகபாமா அல்லது மகளிர் அணி நிர்வாகி வழக்கறிஞர் ஷகீலா போட்டியிட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கடந்தமுறை பா.ம.க போட்டியிட்டு வெற்றிபெற்ற மைலம் தொகுதியில், இந்தமுறை அ.தி.மு.க சார்பில் சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார். அதனால், விக்கிரவாண்டி தொகுதி பா.ம.கவுக்கு ஒதுக்கப்படவிருக்கிறது. அந்த வகையில், மைலத்தில் வெற்றிபெற்ற சிவக்குமார், இந்த முறை விக்கிரவாண்டியில் களமிறங்குவார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல, மேட்டூர் தொகுதியும் இந்தமுறை அ.தி.மு.கவுக்கு ஒதுக்கப்படவிருக்கிறது. அதனால், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் சேலம் வடக்கில் களமிறங்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சேலம் மேற்கில் கடந்தமுறை வெற்றிபெற்ற அருள், தற்போது ராமதாஸ் அணியில் இருப்பதால் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் களமிறங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தலில், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் மட்டும் சௌமியா அன்புமணி, 82,434 வாக்குகள் பெற்றார்.

வடிவேல் ராவணன்

அதனடிப்படையில் அவர் அங்கு களமிறங்கலாம். ஆனால், திருப்போரூரும் சௌமியா போட்டியிடுவதற்கான சாய்ஸில் முதன்மையாக இருக்கிறது. சௌமியா திருப்போரூரில் போட்டியிடும் பட்சத்தில், கடந்தமுறை தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின் வாபஸ் வாங்கப்பட்ட அரசாங்கம் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல, நெய்வேலி தொகுதி கிடைக்காததால், கடலூரில் நெய்வேலிக்குப் பதில் காட்டுமன்னார்கோவிலில் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் களமிறங்கலம என்று சொல்லப்படுகிறது. அதேபோல, கடந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில், 2,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த சித்தமல்லி பழனிசாமி மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குவார் என்று சொல்லப்படுகிறது. கடந்தமுறை ஜெயங்கொண்டத்தில் போட்டியிட்ட வழக்கறிஞர் பாலு இந்தமுறை சோளிங்கரில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டதால், இந்தமுறை சோளிங்கர் அல்லது திருப்போரூரில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>“A separate team with T.V.K; ‘Competition’ for Congress with 20 seats!” – Uproar within the Congress party!</div>

What does the AIADMK alliance seat sharing indicate? What will happen if AIADMK does not secure a majority?