‘கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!’ – என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். என்ன காரணம்?

Vijay
Vijay

தவெக தலைவர் விஜய் இன்று காலை பெரம்பூரின் அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த உடனேயே பிரசார வேனில் ஏறிவிட்டார். பிரசாரத்துக்கு திட்டமிடப்பட்டிருந்த முதல் ஸ்பாட்டான பெரம்பூர் விவேகானந்த ரோடை மதியம் 1 மணிக்கு மேல் எட்டினார்.

வழிநெடுகும் விஜய்யின் தொண்டர்கள் சூழ்ந்ததால் விஜய்யின் வாகனம் ஊர்ந்து ஊர்ந்தே நகர்ந்தது. பெரம்பூரில் பேசி முடித்துவிட்டு கொளத்தூருக்கு விஜய் சென்றார். பெரம்பூரிலிருந்து கொளத்தூருக்கு விஜய் செல்ல 3 மணி நேரம் ஆனது. கொளத்தூரில் அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால், அசம்பாவிதங்களை தவிர்க்க விஜய்யை காவல்துறையினர் சீக்கிரம் பேசி முடிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி விஜய்யும் 2 நிமிடங்களில் பேசி முடித்தார்.

வில்லிவாக்க கூட்டம்
வில்லிவாக்க கூட்டம்

இதேவேளையில் மூன்றாவது ஸ்பாட்டான வில்லிவாக்கத்திலும் விஜய்யின் பிரசாரத்தை பார்க்க எக்கச்சக்கமான பேர் கூடியிருந்தனர். விஜய் கொளத்தூரை எட்டிய சமயத்திலேயே தவெகவின் முக்கிய நிர்வாகயான சி.டி.ஆர்.நிர்மல் குமாகுமார் ‘காவல்துறை எங்களின் பிரசாரத்துக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை’ என தேர்தல் ஆணையத்துக்கு புகார் ஒன்றை கொடுத்தார்.

இந்நிலையில் கொளத்தூரிலிருந்து விஜய் நேராக வில்லிவாக்கம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியின் மாவட்டச்செயலாளர் பூக்கடை குமார் பேசுகையில், ‘தலைவரால் கொளத்தூருக்குள்ளேயே செல்ல முடியவில்லை. காவல்துறை முறையாக பாதுகாப்பு கொடுக்கவில்லை. வில்லிவாக்கத்தில் மாலை 6 மணி வரைதான் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறோம். நெரிசலில் தலைவர் வந்து சேர 8 மணி ஆகும் போல தெரிகிறது. அதனால் பிரசாரத்தை ரத்து செய்கிறோம். இன்னொரு நாள் தலைவர் உங்களை சந்திப்பார்’ என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

‘Iran’ attack in Kuwait – a person from Ramanathapuram dies

Tvk Vijay: ‘Movable assets worth 404 crores; immovable assets!’ – Details of Vijay’s nomination form released