தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடங்க விழா நேற்று (பிப். 2) நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என்று அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (பிப்.3) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

வெள்ளையா? கருப்பா?
அதற்கு பதிலளித்த அவர், “விஜய் தனது சம்பளம் எவ்வளவு என தெளிவுப்படுத்த வேண்டும். விஜய் வாங்குவது வெள்ளையா? கருப்பா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நான் இவ்வளவு தான் சம்பளம் வாங்கினேன், இவ்வளவு வரி கட்டி இருக்கிறேன் என்று விஜயால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. அதனால் யார் யாரை விமர்சனம் செய்வது என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டும்.
தவெக கட்சி யாருடைய பணத்தில் நடக்கிறது? லாட்டரி பணத்தில் இருந்து தான் நடக்கிறது.
கரூரில் 41 உயிர்கள் பறிபோனது. கொஞ்சம் கூட ஒரு குற்ற உணர்வு இல்லாமல் மூன்றாவது ஆண்டு கட்சி தொடக்க விழாவில் வந்து டான்ஸ் ஆடுகிறார் என்றால், அந்த 41 குடும்பங்கள் எந்த அளவிற்கு மனக்கஷ்டப்படும் என்று தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத விஜய்க்கு தவெகவின் தலைவராக இருக்கக்கூடிய அருகதை இல்லை. தவெகவினர் ஆபத்தில் இருக்கின்றனர். அதனால் தான் தங்களைக் காப்பாற்ற விசில் அடிக்கின்றனர்.
போட்டி என்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மட்டும்தான். அதிமுகவை தொட்டால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.