English
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமாக உள்ளது. டெல்லியில் செயற்கை மழை பொழியச் செய்து காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு கடந்த வாரம் இறங்கியது. ஆனால் காற்றில் போதிய ஈரப்பதம் இல்லாததால் இந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “டெல்லி முழுவதும் சாம்பல் நிற துணியை போட்டு மூடியது போல் காற்று மாசு மிக மோசமாக இருந்தது. இது குறித்து நாம் அனைவரும் அரசியல் பாகுபாடின்றி ஆலோசிக்க வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மோசமான சூழலை போக்க எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Tamil
காற்று மாசுவை கட்டுப்படுத்த பிரியங்கா காந்தி கோரிக்கை
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமாக உள்ளது. டெல்லியில் செயற்கை மழை பொழியச் செய்து காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு கடந்த வாரம் இறங்கியது. ஆனால் காற்றில் போதிய ஈரப்பதம் இல்லாததால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “டெல்லி முழுவதும் சாம்பல் நிற துணியை போட்டு மூடியது போல் காற்று மாசு மிக மோசமாக இருந்தது. இது குறித்து நாம் அனைவரும் அரசியல் பாகுபாடின்றி ஆலோசிக்க வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசமான சூழலை போக்க எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.