English
ஓசூர்: கர்நாடகா மாநில தொழிலதிபரை கடத்திக் கொலை செய்து, அவரது உடலை தமிழக எல்லையில் வீசிச் சென்றவரை அம்மாநில போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கர்நாடக மாநிலம் பொம்மசந்திரம் அருகேயுள்ள கித்தனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரை கடந்த 4-ம் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்தனர். இது தொடர்பாக ஹெப்ப கோடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலப்பா ரெட்டி என்பவரை ஜிகினி உள்வட்ட சாலையில் சிலர் காரில் கடத்திச் சென்று, அவரது குடும்பத்தினரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர்.இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். விசாரணையில்,
பொம்மசந்திராவைச் சேர்ந்த ரவி பிரசாத் ரெட்டி என்பவர் மாதேஷ் மற்றும் பாலப்பாரெட்டி ஆகியோரை பணத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.
Tamil
கர்நாடக தொழிலதிபரை கடத்தி கொன்று தமிழக எல்லையில் உடல் வீச்சு: குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார்
ஓசூர்: கர்நாடகா மாநில தொழிலதிபரை கடத்திக் கொலை செய்து, அவரது உடலை தமிழக எல்லையில் வீசிச் சென்றவரை அம்மாநில போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கர்நாடக மாநிலம் பொம்மசந்திரம் அருகேயுள்ள கித்தனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரை கடந்த 4-ம் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்தனர். இது தொடர்பாக ஹெப்ப கோடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலப்பா ரெட்டி என்பவரை ஜிகினி உள்வட்ட சாலையில் சிலர் காரில் கடத்திச் சென்று, அவரது குடும்பத்தினரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர்.இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். விசாரணையில், பொம்மசந்திராவைச் சேர்ந்த ரவி பிரசாத் ரெட்டி என்பவர் மாதேஷ் மற்றும் பாலப்பாரெட்டி ஆகியோரை பணத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.
Click the link above to read the full article on the original website.