`எஸ்.ஐ.ஆர் மூலம் குடியுரிமை பறிப்பு’ – அகில இந்திய மக்கள் இயக்க மாநாட்டில் பரக்கல பிரபாகர் ஆவேசம்!

சென்னை தி.நகரிலுள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் அகில இந்திய மக்கள் இயக்கம் சார்பில் ‘வஞ்சிக்கப்படும் தென்னிந்தியா, பழிவாங்கப்படும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற்றது. பொருளாதார நிபுணர் பரக்கல பிரபாகர், நீதியரசர் ஹரிபரந்தாமனின் உரைகள் கவனம் பெற்றன.

எஸ்.ஐ.ஆர், தொகுதி மறுசீரமைப்பு, மாநில சுயாட்சி விவகாரங்களில் மத்திய பா.ஜ.க அரசால் தென்னிந்திய மாநிலங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்கூறும் விதமாக அகில இந்திய மக்கள் இயக்கம் தென்னிந்திய மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தது.

அதில் உரையாற்றிய பொருளாதார நிபுணரும், அரசியல் ஆய்வாளருமான பரக்கல பிரபாகர், “முதல்முறை இந்திய வரலாற்றில், மத்திய அமைச்சரவையில் தற்போதுதான் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சராக இல்லை. கிறிஸ்துவர் ஒருவர் எம்.பியாக இருக்கிறார்.

டிசம்பர் 25-ல் தேவலாயங்கள் தாக்கப்பட்டபோது, அவர் எங்கே போனார்? எனத் தெரியவில்லை. குஜராத்தில் மாநிலத்திலும் ஒரேயொரு எம்.எல.ஏ கூட இல்லை. உத்திரபிரதேசத்திலும் இதுதான் நிலை. கர்நாடகாவிலும் அப்படித்தான் நிலை. ஒரு எம்.எல்.ஏ இல்லை என்பது மட்டுமல்ல, ஒரே ஒருவர் கூட போட்டியிடவில்லை. இவர்கள் விடுக்கும் செய்தி என்ன? ‘நாங்கள் எதற்கும் கவலைப்படவில்லை என்பது தான். நீங்கள் எங்கள் அரசியல் சமுகத்தின் பகுதியல்ல என்று சொல்கிறார்கள். நீங்கள் எங்கள் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டல், கூட வரலாம்’ என்பதுதான்

எஸ்.ஐ.ஆர் பூதம்

தொகுதி மறுசீரமைப்பில் நாம் தமிழ்நாடு , கன்னடம் கேரளம், பாண்டிச்சேரி, தெலங்கானா ஆகியவை பற்றி கவலைப்பட வேண்டியிருக்கிறது. தென்னிந்தியாவில் தோராயமாக 130 தொகுதிகள் இருக்கின்றன. ஆனால் உத்திரபிரதேசத்தில் 80, பீகாரில் 40 என இரண்டு மாநில எண்ணிக்கையில் தென்னிந்தியாவை சுருக்குகிறார்கள், ஆக, தென்னிந்திய இடங்கள் இல்லாமலே ஆட்சிக்கு வரலாம்..

அதேபோல் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தையும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. குடிமக்களைக் கொல்ல முடியாவிட்டால், குடியுரிமையை கொல்… என்பதுதான் இந்தியாவில் நடக்கிறது… மீளாய்வு என்கிற பெயரில் வாக்குரிமை பறித்து அதன்வழியாக குடியுரிமை பறிக்கப் பார்க்கிறார்கள். நாம் ஒரு பகுதியில் வாழ்கிறோம். ஒருவருக்கும் ஓட்டு இல்லை. ஏதாவது ஒரு அரசியல் தலைவர் வாக்குரிமை இல்லாத பகுதிக்கு சென்று வாக்கு கேட்பாரா?

அவர்களுக்கு வாக்கு இல்லை என்றால் குடிநீர் கிடைக்குமா? ரேசன் அட்டை கிடைக்குமா? கேரளாவில் 24 இலட்சம் பேரும் தமிழ்நாட்டில் 74 இலட்சம் பேரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள் நீக்கபப்ட்டவர்கள் யார்? வாக்குரிமை பறிப்புமூலம் நடக்கும் ரத்தமில்லாத படுகொலை அன்றி வேறில்லை” என்றார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்

அந்நிகழ்வில் பேசிய நீதிபதி அரிபரந்தாமன், “பிரபாகர் பேசும்போது முஸ்லிம் சமூகத்தில் இருந்து எம்பிக்கள், அமைச்சர்கள் இல்லை என்றார்…பிஜேபியில் மட்டுமல்ல, மொத்த்தில் எத்தனை முஸ்லிம் எம்.பி இருக்கிறார்கள்? 24 பேர் அதாவது 14% முஸ்லிம் மக்கள் தொகையில் 543 பேருக்கு 73 பேர் இருக்க வேண்டும். ஆனால், 1952-ல் இருந்தே போதிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை… இப்போது இன்னும் மோசமாக இருக்கிறது.. 1950 இல் காங்கிரஸ் தான் நிரந்தரமாக ஆளுவோம் என்று நினைத்துக் கொண்டது. ஊபா, போடா, என்.ஐ.ஏ. எல்லாம் காங்கிரஸ் கொண்டு வந்தது தான்.. என்.ஐ.ஏ. கேரளாவில், தமிழ்நாட்டில் நுழைந்து யாரையும் கைது செய்யலாம்” என்றார்.

இந்நிகழ்வில், அமைச்சர் மனோ தங்கராஜ், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அஷோக் வர்த்தன் ஷெட்டி உள்ளிட்டோரும் தென்னிந்திய மாநாட்டில் பங்கேற்று எஸ்.ஐ.ஆர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தென்னிந்தியா பாதிப்படைவது குறித்து பேசினர்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Stalin’s reshuffle: O. Panneerselvam in DMK… Will the southern district account be settled?