English
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திமுக அரசு நிர்வாகத்தின் மீது அவ்வப்போது தனது குறைகளை அடுக்கி வருகிறார். முதல்வர் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என்கிற அளவுக்கு அவரது குற்றச்சாட்டுகள் நீளும் நிலையில், “சட்டப்பேரவையில் நான் பேசும் பேச்சை முழுமையாக வெளியிடக்கூட இந்த அரசு பயப்படுகிறது” என்று இப்போது பாய்ந்திருக்கிறார் வேல்முருகன். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பேசிய வேல்முருகன், “நான் சட்டப்பேரவையில் 20 நிமிடங்கள் பேசினால் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வெளியிடப்படுகிறது.
அதை முழுமையாக வெளியிடக்கூட இந்த அரசு பயப்படுகிறது. சில சமயங்களில் நான் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் உட்பட யாராலும் பதிலளிக்க முடிவதில்லை” என்றார்.
Tamil
“என் பேச்சை முழுமையாக வெளியிட அரசுக்கு பயம்!” – தி.வேல்முருகன் ‘திகில்’ குற்றச்சாட்டு
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திமுக அரசு நிர்வாகத்தின் மீது அவ்வப்போது தனது குறைகளை அடுக்கி வருகிறார். முதல்வர் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என்கிற அளவுக்கு அவரது குற்றச்சாட்டுகள் நீளும் நிலையில், “சட்டப்பேரவையில் நான் பேசும் பேச்சை முழுமையாக வெளியிடக்கூட இந்த அரசு பயப்படுகிறது” என்று இப்போது பாய்ந்திருக்கிறார் வேல்முருகன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பேசிய வேல்முருகன், “நான் சட்டப்பேரவையில் 20 நிமிடங்கள் பேசினால் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வெளியிடப்படுகிறது. அதை முழுமையாக வெளியிடக்கூட இந்த அரசு பயப்படுகிறது. சில சமயங்களில் நான் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் உட்பட யாராலும் பதிலளிக்க முடிவதில்லை” என்றார்.
Click the link above to read the full article on the original website.