ஈரான்: `இந்திய விருந்தாளி மீது தாக்குதல்; இருந்தும் மோடி மௌனம்’ – கார்கேயின் `3′ கேள்விகள்!

இந்தியாவில் நடந்த கடற்பயிற்சிக்காக வந்த… கிட்டத்தட்ட இந்தியாவிற்கு அருகே உள்ள கடற்பகுதியில் (இலங்கை கடற்பரப்பில்) ஈரான் கப்பலான IRIS தேனாவை மூழ்கடித்துள்ளது அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்.

ஆனால், இது குறித்து மத்திய அரசு இதுவரை வாயே திறக்கவே இல்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது…

“1. இந்தியாவின் விருந்தாளியான ஈரான் கப்பல் இங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இதற்கு ஏதேனும் கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி அமைதியாகவே இருக்கிறார்.

IRIS Dena
IRIS Dena

சொந்த கொல்லைப்புறத்தில் நடக்கும் ஒரு விஷயத்திற்கு எதிர்வினையாற்றாதபோது, MAHASAGAR பற்றியும், இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு வழங்குநராக இருக்கிறீர்கள் என்றும் ஏன் பாடம் எடுக்கிறீர்கள்?

2. 1,100 மாலுமிகளுடன் இந்தியாவின் கொடி கொண்ட 38 வணிகக் கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ளன.

அங்கே கேப்டன் ஆஷிஷ் குமார் உள்ளிட்ட இரண்டு மாலுமிகள் இறந்துள்ளனர். அங்கே ஏன் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?

இன்னும் 25 நாள்களுக்குத்தான் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது என்று கூறுகிறீர்கள்.

எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உங்களுடைய எரிசக்தித் திட்டம் என்ன? ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக ஒத்துக்கொண்டுள்ள இந்த வேளையில் என்ன திட்டம்?

வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் முக்கியப் பொருள்கள் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

3. வெளியுறவுத் துறையின் மார்ச் 3, 2026 அறிக்கையின் படி, ‘சில இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்… சிலர் காணாமல் போய் உள்ளனர்.’

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள்.

உதவி கேட்டு மருத்துவ மாணவர்கள் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை இந்திய அரசு எப்படி பாதுகாக்கிறது? அவர்களை மீட்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா?

மோடி ஜி அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் சரணடைந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இது இந்தியாவின் நலனை குழைக்கிறது. பல ஆண்டுகளாகக் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதித்துள்ளது.”


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Iran: “India’s Guest” – Iran on the ship attacked by America!

Why question the Modi government after the US sank the Iranian warship?