English
புதுடெல்லி: இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை தினத்தை ஒட்டி டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாவது: ஓர் அரசு வலுவாக இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். அண்மை காலத்தில் இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் ஆட்சிகள் மாறின. அந்த நாடுகளில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பலவீனம், சுயநலம், குழப்பமான அரசால் நாட்டை திறம்பட வழிநடத்த முடியாது. ஒரு நாட்டின் அரசியல் அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் அரசியல் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
Tamil
இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: அஜித் தோவல் கருத்து
புதுடெல்லி: இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை தினத்தை ஒட்டி டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாவது: ஓர் அரசு வலுவாக இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். அண்மை காலத்தில் இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் ஆட்சிகள் மாறின. அந்த நாடுகளில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பலவீனம், சுயநலம், குழப்பமான அரசால் நாட்டை திறம்பட வழிநடத்த முடியாது. ஒரு நாட்டின் அரசியல் அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் அரசியல் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
Click the link above to read the full article on the original website.