English
Nagapattinam: Sri Lankan naval forces arrested 31 Tamil Nadu fishermen who were fishing near the Indian border area yesterday. Chief Minister Stalin has written a letter to Union External Affairs Minister Jaishankar requesting their rescue. On August 31, 31 fishermen set out to fish from three fishing boats at the Nagai Mavattam Akkaraipettai, Nambiyar Nagar fishing harbor. The day before yesterday night, while they were fishing near the Indian border area, Sri Lankan naval forces arrived, warned the fishermen, and accused them of fishing inside Sri Lankan territory. They arrested all 31 fishermen and seized the three fishing boats. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Naagapattinam: Indhiya ellaip pagudhiil meenpidiththuk kondirundha Tamizhaameenavargal 31 peraai Ilangai kadarpadaiyinar netru kaithu seidhuvargal. Avargalai meedkak kori Maththiya veliyuravu amaichar Jeyasangarku Mudhalvar Stalin kadidham ezhudhiyaar. Naagai Maavattam Akkaraip-pettai, Nambiyaar Nagar Meenpidi thuraimugaththil irundhu 3 visaippadakugalil 31 meenavargal Akk.31-am thethi kadalukku meenpidikka sendranar. Netru munthinam iravu Indhiya ellai pagudhiil meenpidiththuk kondirundhapodhu, angu vandha Ilangai kadarpadaiyinar meenavargalai surivalaiththu, Ilangai ellaikkul nuzhaindhu meenpidiththadhaga koori, 31 meenavargalaiyum kaithu seithanar. 3 visaippadakugalaiyum parimudhal seithanar.
Tamil
English
நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 31 மீனவர்கள் அக்.31-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்து, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, 31 மீனவர்களையும் கைது செய்தனர். 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
Tamil
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 31 மீனவர்கள் அக்.31-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்து, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, 31 மீனவர்களையும் கைது செய்தனர். 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
Click the link above to read the full article on the original website.