இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

புதுடெல்லி: இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சமாஜ்​வாதி கட்​சி​யின் மத்​திய லக்னோ தொகுதி எம்​எல்ஏ ரவி​தாஸ் மல்​ஹோத்ரா கூறும்போது, ‘‘பிஹாரில் வாக்​குச் சீட்டு அடிப்​படை​யில் தேர்​தல் நடந்​திருந்​தால் இண்​டியா கூட்​டணி வெற்றி பெற்​றிருக்​கும். நாட்​டின் அரசி​யல் முக்​கிய​த்​து​வம் வாய்ந்த ஒரு மாநிலத்​தில் (உ.பி.​யில்) தனித்து ஆட்சி அமைக்​கும் திறனுள்ள கட்​சி​யாக சமாஜ்​வாதி உள்​ளது. இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும்” என்​றார்.
நாட்​டின் முக்​கிய எதிர்க்​கட்​சி​யான காங்​கிரஸ் பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 6 இடங்​களில் மட்​டுமே வென்​றுள்​ளது. தேர்​தலுக்கு முன் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நடத்​திய வாக்​காளர் அதி​கார யாத்​திரை உரிய பலனை அளிக்​க​வில்​லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்

கடும் பணி நெருக்கடி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் புறக்கணிப்பு – வருவாய்த் துறை சங்கங்கள் அறிவிப்பு