English
அரியலூர்: அரியலூர் அருகே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி நேற்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. அப்போது, சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு அரியலூருக்குப் புறப்பட்டது. திருச்சி இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ்(34) லாரியை ஓட்டினார். நேற்று காலை 6.40 மணியளவில் வாரணவாசியை அடுத்த விநாயகர் கோயில் வளைவில் திரும்பியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பற்றி எரியத் தொடங்கி, வெடித்துச் சிதறின.
ஓட்டுநர் கனகராஜ் காயத்துடன் அங்கிருந்து தப்பினார்.
Tamil
அரியலூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின
அரியலூர்: அரியலூர் அருகே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி நேற்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. அப்போது, சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு அரியலூருக்குப் புறப்பட்டது. திருச்சி இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ்(34) லாரியை ஓட்டினார்.
நேற்று காலை 6.40 மணியளவில் வாரணவாசியை அடுத்த விநாயகர் கோயில் வளைவில் திரும்பியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பற்றி எரியத் தொடங்கி, வெடித்துச் சிதறின. ஓட்டுநர் கனகராஜ் காயத்துடன் அங்கிருந்து தப்பினார்.
Click the link above to read the full article on the original website.