English
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிகளில் மழை காரணமாக வயலில் தேங்கிய மழைநீரில் 500 ஏக்கர் குறுவைப் பயிர்கள் சாய்ந்தன. பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை, புத்தூர், உடையார்கோவில், அருந்தவபுரம், உத்தன்குடி உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் கடந்த ஜூலை இறுதியில் 500 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் குறுவை நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், இப்பகுதி வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்து விட்டன.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் கூறியதாவது: அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழையால் 500-க்கும் அதிகமான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டன.
Tamil
அம்மாபேட்டையில் தொடர் மழையால் வயலில் சாய்ந்த 500 ஏக்கர் குறுவை பயிர்கள்
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிகளில் மழை காரணமாக வயலில் தேங்கிய மழைநீரில் 500 ஏக்கர் குறுவைப் பயிர்கள் சாய்ந்தன. பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை, புத்தூர், உடையார்கோவில், அருந்தவபுரம், உத்தன்குடி உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் கடந்த ஜூலை இறுதியில் 500 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் குறுவை நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், இப்பகுதி வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் கூறியதாவது: அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழையால் 500-க்கும் அதிகமான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டன.
Click the link above to read the full article on the original website.