அக்.28 காலை ‘மோந்தா’ தீவிரப் புயலாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

English

புதுடெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ‘மோந்தா’ புயல் அக்.28-ம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளைக் கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘மோந்தா’ என்ற பெயரை தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது. ‘மோந்தா’ என்றால் அழகிய, நறுமணம் மிக்க மலர் என்று அர்த்தமாம். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ‘மோந்தா’ முதல் புயல் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamil

அக்.28 காலை ‘மோந்தா’ தீவிரப் புயலாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

புதுடெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ‘மோந்தா’ புயல் அக்.28-ம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளைக் கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘மோந்தா’ என்ற பெயரை தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது. ‘மோந்தா’ என்றால் அழகிய, நறுமணம் மிக்க மலர் என்று அர்த்தமாம். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ‘மோந்தா’ முதல் புயல் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் தேர்வு: அன்புமணி முன்வைக்கும் கோரிக்கை!

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்: அணித்தேர்வு குழப்பத்தில் ஆஸ்திரேலியா!